லம்போர்கினி ஹூராகென் 2 வீல் டிரைவ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது

By Ravichandran

2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட லம்போர்கினி ஹூராகென் சூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல் விற்பனையில் இருந்த நிலையில், தற்போது 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் அறிமுகம்;

இந்தியாவில் அறிமுகம்;

லம்போர்கினி ஹுராகேன் ஆர்டபுள்யூடி எல்பி 580-2, சில தினங்களுக்கு முன்பு தான் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யபட்டது. இதையடுத்து, உடனடியாக புதிய மாடல் இது இந்தியாவிலும் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் அம்சங்களை பொருத்த வரை, லம்போர்கினி ஹுராகேன் எல்பி 580-2 ரியர் வீல் டிரைவ் காருக்கும், 4 வீல் டிரைவ் காருக்கும் தோற்றத்தில் வித்தியாசங்கள் இல்லை.

இந்த காரின் ஃப்ரண்டிலும், ரியரிலும், சில குறிப்பிடும்படியான மாற்றங்கள் செய்யபட்டு, புதிய மற்றும் இளமையான தோற்றம் வழங்கபட்டுள்ளது.

இந்த ஹுராகேன் கார் சிறப்பான ஏரோடைனமிக் தாத்பரியத்தில், வடிவமைப்பாளர்கள் சிறப்பான பணியை செய்துள்ளனர்.

பிற அம்சங்கள்;

பிற அம்சங்கள்;

லம்போர்கினி ஹுராகேன் எல்பி 580-2 ஆர்டபுள்யூடி, 19 இஞ்ச் கரி ரிம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அலுமினியம் பிரேக் டிஸ்க் கேலிபர்களுடன் கூடிய ஸ்டீல் பிரேக்கு-கள் மூலம் பிரேக்கிங் ஃபோர்ஸ் வழங்கபடுகிறது. இந்த பிரேக்கிங் அமைப்பு இலகுவானதாக உள்ளது. மேலும், வழக்கமான லம்போர்கினி பிரேக்குகளை காட்டிலும், வேகமாக குளிர்ந்து விடுகின்றது.

எடை;

எடை;

லம்போர்கினி ஹுராகேன் எல்பி 580-2 ஆர்டபுள்யூடி எடை குறைவானதாக உள்ளது.

இதில் ஆர்டபுள்யூடி எனப்படும் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளதால், வெரும் 1,389 கிலோகிராம்கள் எடை மட்டுமே கொண்டுள்ளது. இதன் எடை அமைப்பு, முன் பகுதியில் 40 % சதவிகிதம் என்ற அளவிலும், ரியர் பகுதியில் 60 % சதவிகிதம் என்ற அளவிலும் பகிர்ந்து வடிவமைக்கபட்டுள்ளது.

இந்த சூப்பர் காரின், ஃப்ரண்ட் ஆக்ஸின் இனெர்ஷியாவை குறைப்பதில் லம்போர்கினி நிறுவனம் அதிக அக்கரை செலுத்தியுள்ளது.

மாற்றங்கள்;

மாற்றங்கள்;

2 வீல் டிரைவ் சிஸ்டத்திற்கு தக்கவாறு, சஸ்பென்ஷன் அமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால், சரியான நிலைத்தன்மையில் கார் செல்லும்.

எஞ்சின்;

எஞ்சின்;

லம்போர்கினி ஹூராகென் 2 வீல் சிஸ்டத்தில் இருக்கும் எஞ்சின் ஆற்றலை 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் அமைப்பு வழியாக பின்புற சக்கரங்களுக்கு ஆற்றலை கடத்தும்.

4 வீல் டிரைவ் மாடலைவிட இந்த 2 வீல் டிரைவ் மாடல் 31 பிஎச்பி பவரை குறைவாக வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 571 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.

கிடைக்கும் நிறங்கள்;

கிடைக்கும் நிறங்கள்;

லம்போர்கினி ஹுராகேன் எல்பி 580-2 ஆர்டபுள்யூடி பல்வேறு வண்ணங்கள் கொண்ட பெயிண்ட் வேலைப்பாடுகளுடன் கிடைக்கின்றது.

இந்திய வாடிக்கையாளர்களுக்கு, ஆட் பெர்ஸோனம் என்ற ஒரு சலுகை வழங்கபடுகின்றது. இதன்படி, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த வகைகளில், இண்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர்களின் அம்சங்களை வடிவமைத்து கொள்ளும் கஸ்டமைசேஷன் வாய்ப்புகள் வழங்கபடுகிறது.

விலை;

விலை;

லம்போர்கினி ஹுராகேன் எல்பி 580-2 ஆர்டபுள்யூடி, இந்தியாவில் 2.99 கோடி ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் கிடைக்கின்றது.

Most Read Articles
English summary
Lamborghini Huracan RWD LP 580-2 SuperCar has been Launched In India. Lamborghini Huracan RWD LP 580-2 has Rear Wheel Drive (RWD) Huracan LP 580-2 in India. This is the most affordable supercar in India and across the globe from Lamborghini.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X