2018ல் விற்பனைக்கு வருகிறது லம்போர்கினி உரஸ் எஸ்யூவி!

Written By:

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் லம்போர்கினியின் புதிய உரஸ் எஸ்யூவி 2018ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சூப்பர் கார்களுக்கு புகழ்பெற்ற லம்போர்கினி நிறுவனத்தின் முதல் எஸ்யூவி மாடல் என்பதால், அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. லம்போர்கினியின் தாய் நாடான இத்தாலியில்தான் இந்த புதிய எஸ்யூவி மாடல் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

 

இதற்காக, கூடுதல் பணியாளர்களை லம்போர்கினி நிறுவனம் பணியமர்த்த உள்ளது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படும் லம்போர்கினி தனது புதிய எஸ்யூவி மாடலை புதிய ஆடி க்யூ7 மற்றும் பென்ட்லீ பென்டைகா எஸ்யூவிகள் உருவாக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில்தான் உரஸ் எஸ்யூவியையும் உருவாக்கி வருகிறது.

முதலில் இத்தாலி, அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்த புதிய எஸ்யூவி மாடல் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. இதைத்தொடர்ந்து, பிற மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும்.

 

எஞ்சின் விபரங்கள் பற்றி இதுவரை தகவல் இல்லை. ஆனால், டர்போசார்ஜர்கள் கொண்ட சக்திவாய்ந்த வி10 எஞ்சின் இந்த எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

English summary
Italian supercar manufacturer has showcased its luxury performance SUV on several occasions. The Lamborghini Urus SUV will be available in various markets by 2018.
Story first published: Friday, May 29, 2015, 9:42 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos