அட்ராசக்கை... லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்டுக்கு அமோக வரவேற்பு!

Written By:

இந்தியாவில் லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்டுக்கு எதிர்பாராத வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்த மாதம் 2ந் தேதி விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்டுக்கு சமீபத்தில் முன்பதிவு துவங்கப்பட்டது.

விலை விபரம் அறிவிக்கப்படாத நிலையில், இதுவரை 200க்கும் மேற்பட்டோர் இந்த புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் சொகுசு எஸ்யூவி மாடலுக்கு முன்பதிவு செய்துவிட்டனர். இது லேண்ட்ரோவர் இந்தியா நிறுவனத்துக்கு இன்ப அதிர்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது.

ஃப்ரீலேண்டர்-2 எஸ்யூவிக்கு மாற்று

ஃப்ரீலேண்டர்-2 எஸ்யூவிக்கு மாற்று

தற்போது இந்தியாவில் விற்பனையில் இருந்து வரும் லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்ட்ர்-2 எஸ்யூவி மாடலுக்கு மாற்றாக இந்த புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் மாடல்களில் கிடைக்கிறது. ஃபோர்டு நிறுவனத்திடமிருந்து பெறப்படும் 2.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக இருக்கும். மேலும், 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

தரமான இன்டிரியர்

தரமான இன்டிரியர்

இன்டிரியர் முழுவதும் தரமிக்க பிளாஸ்டிக் பாகங்கள், டிரைவர் எளிதாக இயக்கும் வகையிலான சென்ட்ரல் கன்சோல் சுவிட்சுகள், பெரிய ஸ்டீயரிங் வீல் போன்றவை குறிப்பிட்டு கூறலாம். பிரிமியம் லெதர் ஃபினிஷிங் கொண்டிருக்கும்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இது 7 சீட்டர் மாடலாக வருகிறது. 5 பெரியவர்கள், 2 சிறியவர்கள் தாராளமாக அமர்ந்து பயணிக்கலாம்.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

பாதசாரிகளை காப்பதற்கான ஏர்பேக், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்ஸி பிரேக் சிஸ்டம், அனைத்து சாலைநிலைகளையும் எதிர்கொள்வதற்கான டெர்ரெய்ன் ரெஸ்பான்ஸ் தொழில்நுட்பம், 600மிமீ ஆழம் வரை தண்ணீரில் செல்லும் வகையிலான பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

 எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.45 லட்சம் முதல் ரூ.60 லட்சத்திற்கு இடையிலான விலையில் நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
English summary
Land Rover will be launching its Discovery Sport in India on 2nd of September, 2015. The British based manufacturer has already commenced pre-booking for this premium luxury SUV. Within a short span of time Land Rover India has roped in 200 bookings for their new Discovery Sport. This is a terrific response for a premium luxury SUV model that will be offered in India.
Story first published: Monday, August 17, 2015, 12:08 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark