டிசி அவந்தி ஸ்போர்ட்ஸ் காரின் லிமிடேட் எடிசன் வெளியீடு

By Saravana

இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் கார் மாடலான டிசி அவந்தியின் லிமிடேட் எடிசன் மாடல் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

டிசி அவந்தி 310 என்ற பெயரில் இந்த புதிய லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்போர்ட்ஸ் காரின் சிறப்பம்சங்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

மொத்தமாக 31 கார்கள் மட்டுமே இந்த லிமிடேட் எடிசன் பேட்ஜில் விற்பனை செய்யப்பட உள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

டிசி அவந்தி ஸ்போர்ட்ஸ் காரின் சாதாரண மாடலில் பயன்படுத்தப்படும் அதே 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின்தான் இந்த லிமிடேட் எடிசன் மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ரெனோ நிறுவனத்திடமிருந்து பெறப்படும் இந்த எஞ்சின், சாதாரண 250 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் நிலையில், லிமிடேட் எடிசன் மாடலில் 310 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக ட்யூனிங் செய்யப்பட்டிருக்கிறது.

ஏஎம்டி கியர்பாக்ஸ்

ஏஎம்டி கியர்பாக்ஸ்

இந்த லிமிடேட் எடிசன் மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக வழங்கப்பட உள்ளது. மேலும், பேடில் ஷிஃப்ட் வசதியுடன் வருகிறது. இந்த ஏஎம்டி கியர்பாக்ஸை டிசி நிறுவனம் சொந்தமாக உருவாக்கியிருக்கிறது. அதேநேரத்தில், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைப்பு

கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைப்பு

அதிக செயல்திறன் கொண்ட இந்த கார் சிறப்பான நிலைத்தன்மையை வழங்கும் விதத்தில், காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 20 மிமீ அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று, சஸ்பென்ஷன் அமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

கூடுதல் சக்தியுடன் கூடிய எஞ்சின் பொருத்தப்பட்டிருப்பது மட்டுமின்றி, கார்பன் ஃபைபர் ஸ்பிளிட்டர்கள், ரியர் டிஃபியூசர் மற்றும் ஸ்பாய்லர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த லிமிடேட் எடிசன் மாடலில் எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் டெயில்லைட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இன்டீரியர்

இன்டீரியர்

உட்புறத்தில் அல்காண்ட்ரா உயர்தர லெதர் இருக்கைகள், லெதர் கவருடன் கூடிய ஸ்டீயரிங் வீல் ஆகியவை இந்த காரின் மதிப்பை உயர்த்துகின்றன. டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 பாதுகாப்பு

பாதுகாப்பு

கார் உருளும்போது உள்ள இருக்கும் பயணிகளை பாதுகாப்பதற்கான ஆன்டி ரோல் பார்கள் உள்ளன. ஏர்பேக்குகளும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

சாம்பல்- பச்சை, வெள்ளை- நீலம் மற்றும் மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட சாம்பல்-ஆரஞ்ச் என மூன்று விதமான வண்ணக் கலவைகளில் வருகிறது.

விலை விபரம்

விலை விபரம்

சாதாரண டிசி அவந்தி ஸ்போர்ட்ஸ் கார் ரூ.35 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த லிமிடேட் எடிசன் மாடல் ரூ.44 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Photo Credit

Most Read Articles
English summary
DC has come up with a limited edition model, called the DC Avanti 310. So if one is wondering what is special about the car, well, there is a big list. To start, the car will be made in very limited numbers, 31 to be exact.
Story first published: Saturday, December 12, 2015, 14:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X