அரபு நாட்டில் தயாரான முதல் ஹைப்பர் கார் லைகன் விற்பனைக்கு ரெடி!

Posted By:

அரபு நாட்டில் தயாரான முதல் ஹைப்பர் ஸ்போர்ட்ஸ் கார் என்ற பெருமையை பெற்றிருக்கும் லைகன் ஹைப்பர் கார் துபாயில் விற்பனைக்கு வந்துள்ளது. லெபனான் நாட்டின் டபிள்யூ மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஹைப்பர் காரை வடிவமைத்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு நடந்த கத்தார் ஆட்டோ ஷோவில்தான் இந்த கார் முதல்முறையாக பொது தரிசனத்திற்கு வந்தது. இந்த நிலையில், தற்போது உற்பத்தி நிலை அடைந்துவிட்டது. ரூ.21.48 கோடி மதிப்பில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய காரில் இருக்கும் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

வைரக்கற்கள்

வைரக்கற்கள்

இதன் விலை மதிப்பு இந்தளவு அதிகரிக்க காரணம் ஹெட்லைட்டில் வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன், டைட்டானியம் எல்இடி பிளேடுகளில் 420 வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டால், மாணிக்க கற்களையும் பதித்து வாங்க முடியும்.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த அரேபிய குதிரையில் 740 பிஎச்பி பவரையும், 960என்எம் டார்க்கையும் அளிக்கும் 3.7 லிட்டர் ட்வின் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு சீக்குவென்ஷியல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் தேர்வு செய்து கொள்ளலாம்.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு 390 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்ட இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 2.8 வினாடிகளில் கடந்துவிடும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

முழுவதுமான 3டி திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், தங்க நிற நூலில் கைத்தையல்கள் செய்யப்பட்ட, லெதர் இருக்கைகள் என பணத்திற்கு இணையான அம்சங்கள் உண்டு.

குவியும் ஆர்டர்

குவியும் ஆர்டர்

இந்த கார் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஒரு மாதத்திலேயே 100 முன்பதிவுகளை பெற்றதாக டபிள்யூ மோட்டார்ஸ் தெரிவித்திருந்தது. 7 கார்களை மட்டுமே தயாரிக் இலக்கு வைக்கப்பட்ட நிலையில், 100க்கும் அதிகமான முன்பதிவுகள் கிடைத்ததால், தனது உற்பத்தி இலக்கில் மாற்றம் செய்தது.

உலகின் காஸ்ட்லி கார்

உலகின் காஸ்ட்லி கார்

ரூ.21.48 கோடியில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த கார்தான் தற்போதைய நிலையில், விலையுயர்ந்த ஹைப்பர் ஸ்போர்ட் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

 
English summary
Arabia's first supercar, the Lykan Hypersport is up for sale in Dubai with a hefty price tag of USD 3.4 million (INR 21.48 crores).
Please Wait while comments are loading...

Latest Photos