க்ராஷ் டெஸ்ட்டில் 'மேட் இன் இந்தியா' ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு 4 ஸ்டார் ரேட்டிங்!

Written By:

இந்தியாவில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இதுவரை 70,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்று அசத்தியிருக்கிறது. மேலும், இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தநிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ஒன்றை லத்தீன் என்சிஏபி அமைப்பு க்ராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தியது. அதில், கிடைத்த ஆய்வு முடிவு விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

க்ரெட்டா மாடல்

க்ரெட்டா மாடல்

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் பேஸ் வேரியண்ட் மாடல்தான் க்ராஷ் டெஸ்ட்டுக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால், ஓட்டுனர் மற்றும் முன்புற பயணிக்கான டியூவல் ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு அம்சங்களை கொண்ட ஏற்றுமதி மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 முடிவுகள்

முடிவுகள்

முன்புற மோதல் சோதனையில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் அதிகபட்சமான 17 புள்ளிகளுக்கு 15.57 புள்ளிகளையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் அதிகபட்சமான 49 புள்ளிகளுக்கு 29.87 புள்ளிகளையும் பெற்றது.

ஒட்டுமொத்த மதிப்பீடு

ஒட்டுமொத்த மதிப்பீடு

பெரியவர்களுக்கான தரமதிப்பீட்டில் 5க்கு 4 என்ற நட்சத்திர மதிப்பீட்டையும், சிறியவர்களுக்கான தரமதிப்பீட்டில் 5க்கு 3 என்ற நட்சத்திர மதிப்பீட்டையும் பெற்றிருக்கிறது. ஒட்டுமொத்த முடிவின்படி, 5க்கு 4 என்ற நட்சத்திர மதிப்பீட்டை ஹூண்டாய் க்ரெட்டா பெற்றது.

சிறப்பான கட்டுமானம்

சிறப்பான கட்டுமானம்

டியூவல் ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மட்டுமின்றி, ஹூண்டாய் க்ரெட்டாவின் ஏற்றுமதி மாடல் மிகச்சிறப்பான கட்டுமானத்தை பெற்றிருப்பது இந்த க்ராஷ் டெஸ்ட் மூலமாக தெரியவந்துள்ளது.

பாதுகாப்பான மாடல்தான்...

பாதுகாப்பான மாடல்தான்...

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் டாப் வேரியண்ட்டுகள் 6 ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்பட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருப்பதால், நிச்சயம் பாதுகாப்பான மாடல்களில் ஒன்றாக கருத முடியும்.

இந்தியாவிலும் க்ராஷ் டெஸ்ட்

இந்தியாவிலும் க்ராஷ் டெஸ்ட்

வெளிநாடுகளில் உள்ளது போன்ற நவீன க்ராஷ் டெஸ்ட் சோதனை மையத்தை திறக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, தற்போது கட்டமைக்கப்பட்டு வரும் க்ராஷ் டெஸ்ட் மையங்கள் அடுத்த ஆண்டு இறுதியில் செயல்பட துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, இந்தியாவில் விற்பனையாகும் கார்களின் பாதுகாப்பு வெகுவாக மேம்படும் என்று நம்பலாம்.

வீடியோ

க்ராஷ் டெஸ்ட் வீடியோ.

 
English summary
Hyundai Creta Latin NCAP ratings show that the India made car scored 4 stars with just two airbags, side impact testing will begin in EuroNCAP
Story first published: Wednesday, December 16, 2015, 16:23 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark