மஹிந்திரா எஸ்யூவி மற்றும் கார்களுக்கான சிறப்பு பரிசோதனை முகாம் - விபரம்

Written By:

அடுத்த வாரம் மஹிந்திரா எஸ்யூவி வகை வாகனங்கள் மற்றும் கார்களுக்கான சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.

மஹிந்திராவின் தனிநபர் பயன்பாட்டுப் பிரிவு வாகனங்களான பொலிரோ, ஸ்கார்ப்பியோ, தார், ஸைலோ, எக்ஸ்யூவி 500, குவான்ட்டோ, வெரிட்டோ, வெரிட்டோ வைப், லோகன் மற்றும் சாங்யாங் ரெக்ஸ்டன் கார் மாடல்களுக்கு இந்த பரிசோதனை முகாம் நடக்க இருக்கிறது.

 

மஹிந்திரா எம் ப்ளஸ் என்று அழைக்கப்படும் இந்த சிறப்பு பரிசோதனை முகாம் வரும் மார்ச் 2ந் தேதி முதல் 8ந் தேதி வரை நாடு முழுவதும் உள்ள மஹிந்திராவின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களில் நடைபெற இருக்கிறது.

இந்த பரிசோதனை முகாமில் 75 விதமான பரிசோதனைகள் செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட்டாது.

மேலும், லேபர் கட்டணம் மற்றும் உதிரிபாகங்களில் சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் சேமிப்பை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்று மஹிந்திரா வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சர்வீஸ் முகாமில் கலந்து கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளையும் பெறும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Mahindra has christened this service as ‘M-Plus', for their personal range of vehicles. Customers owning Mahindra Bolero, Scorpio, Thar, Xylo, XUV 500, Quanto, Verito, Verito Vibe, Logan and Ssangyong Rexton can avail this offer.
Story first published: Friday, February 27, 2015, 10:43 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos