இந்தியாவின் நம்பர்- 1 எஸ்யூவி மஹிந்திரா பொலிரோ பற்றி 10 முக்கியத் தகவல்கள்!!

Written By:

நம் நாட்டு எஸ்யூவி மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மாடல் என்ற பெருமையை தொடர்ந்து 9வது ஆண்டாக பெற்றிருக்கிறது மஹிந்திரா பொலிரோ. கடந்த 2007ம் ஆண்டு முதல் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து வரும் பொலிரோ, கடந்த 2014- 15 நிதி ஆண்டில் மட்டும் விற்பனையில் ஒரு லட்சத்தை தாண்டி சாதனை படைத்தது.

இதுபோன்று, ஒரு நிதி ஆண்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விற்பனை எண்ணிக்கையை தாண்டியிருப்பது இது 4வது முறையாகும். எஸ்யூவி மார்க்கெட்டில் நம்பர்- 1 ஆக இருப்பதுடன், இந்தியாவின் டாப் - 10 கார்களின் பட்டியலில் 5வது இடத்தை பெற்றும் அசத்தியிருக்கிறது. நம் நாட்டு வாடிக்கையாளர்களின் நம்பகமான பொலிரோ எஸ்யூவி பற்றிய முக்கியத் தகவல்கள் ஸ்லைடரில் காத்திருக்கிறது.

01. பொலிரோ தலைமுறை

01. பொலிரோ தலைமுறை

கடந்த 2001ம் ஆண்டு மஹந்திரா பொலிரோ எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் 2007ம் ஆண்டில் புதிய பொலிரோ எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2008ம் ஆண்டு அதிசக்திவாய்ந்த சிஆர்டிஇ எஞ்சினுடன் விஎல்எக்ஸ் என்ற மாடலும், மைக்ரோ ஹைபிரிட் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது. 2011ம் ஆண்டில் தற்போது இருக்கும் எம்2டிஐசிஆர் எஞ்சின் கொண்ட மஹிந்திரா பொலிரோ விற்பனைக்கு வந்தது.

02. எஞ்சின்

02. எஞ்சின்

மஹிந்திரா பொலிரோவில் 2,523சிசி எம்2டிசிஆர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 3,200 ஆர்பிஎம்.,மில் அதிகபட்சமாக 62 பிஎச்பி பவரையும், 1,400 முதல் 2,200 ஆர்பிஎம்.,மில் 195 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. பிஎஸ்- 3 மற்றும் பிஎஸ் - 4 ஆகிய மாசுக்கட்டுப்பாட்டு கொண்ட மாடல்களில் கிடைக்கிறது.

03. மைலேஜ்

03. மைலேஜ்

அராய் மைலேஜ்: 15.96 கிமீ/லி. இந்த எஸ்யூவியின் விற்பனை அதிகம் இருப்பதற்கு சிறப்பான மைலேஜும் ஒரு காரணம்.

 04. கிரவுண்ட் கிளிரயன்ஸ்

04. கிரவுண்ட் கிளிரயன்ஸ்

மஹிந்திரா பொலிரோ 180மிமீ தரை இடைவெளியுடன் வடிவைக்கப்பட்டுள்ளது.

05. வடிவம்

05. வடிவம்

இந்த எஸ்யூவி 4,107 மிமீ நீளமும், 1,745மிமீ அகலமும், 1,800மிமீ உயரம் உடையது. இதன் வீல் பேஸ் 2,680மிமீ. 5.8 மீட்டர் டர்னிங் ரேடியஸ் கொண்டது.

 06. வண்ணங்கள்

06. வண்ணங்கள்

கருப்பு, சிவப்பு, வெள்ளை, பச்சை, அடர் சாம்பல் நிறங்களில் கிடைக்கிறது.

 07. விலை விபரம்

07. விலை விபரம்

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி ரூ.6.76 லட்சம் முதல் ரூ.9.23 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 08. வாரண்டி

08. வாரண்டி

கிலோமீட்டர் வரம்பு இல்லாமல் ஓர் ஆண்டுக்கான வாரண்டி வழங்கப்படுகிறது.

 09. பொலிரோவின் சிறப்புகள்

09. பொலிரோவின் சிறப்புகள்

இடவசதி

சக்திவாய்ந்த எஞ்சின்

வலுவான பாடி

மைலேஜ்

விலை

10. பொலிரோவின் குறைகள்

10. பொலிரோவின் குறைகள்

சொகுசு வசதிகள் குறைவு

கையாளுமை

குறைவான பிக்கப்

தரம் குறைவான இன்டிரியர் பாகங்கள்

டாக்கோமீட்டர் இல்லை

 
English summary
Mahindra is the leading manufacturer and seller of utility vehicles in India. The Bolero is among their oldest SUVs that is offered in the country. Now the Bolero by Mahindra has been awarded as India's No.1 SUV for the ninth time in a row. They also announced that their Bolero is the highest selling SUV since 2007.
Story first published: Thursday, April 16, 2015, 10:03 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark