சென்னை, காஞ்சிபுரத்தில் மஹிந்திரா ஃபர்ஸ்ட்சாய்ஸ் ஷோரூம்கள் திறப்பு

Written By:

சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் மஹிந்திரா ஃப்ர்ஸ்ட்சாய்ஸ் நிறுவனத்தின் பழைய கார் ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளன.

பழைய கார்களை வாங்கி, விற்பதில் மஹிந்திரா ஃபர்ஸ்ட்சாய்ஸ் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. மார்க்கெட்டில் தலைமைத்துவத்தை தக்க வைத்துக்கொள்ளும் விதத்தில் வர்த்தக விரிவாக்க நடவடிக்கைகளை மிக தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

 

இதன் ஒருபகுதியாக தமிழகத்தில் புதிதாக இரண்டு பழைய கார் ஷோரூம்களை அந்த நிறுவனம் திறந்திருக்கிறது. சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் இந்த புதிய ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மஹிந்திரா ஃபர்ஸ்ட்சாய்ஸ் வீல்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி யதின் சதா கூறுகையில்," தென்னிந்தியாவில் மிக வலுவான கட்டமைப்பை பெற்றிருக்கிறோம்.

இதனை அதிகரிக்கும் விதத்தில் தமிழகத்தில் 2 புதிய பழைய கார் ஷோரூம்களை திறந்திருக்கிறோம். தமிழகத்தில் 28 பழைய கார் ஷோரூம்களை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 35 ஆக உயர்த்த திட்டமிட்டிருக்கிறோம்," என்று தெரிவித்தார்.

English summary
Mahindra First Choice Wheels is a multi-brand certified used car company. This company is growing at a rapid pace, in just five years they have a CAGR of 35 percent. They are spread in several metros, mini metros and smaller towns of India. They have now inaugurated two new dealerships in Chennai and Kanchipuram each. Mahindra First Choice has a total coverage of more than 7.5 lakh square feet. They have also been declared the winners of ‘Franchisor of the Year' award.
Story first published: Saturday, February 7, 2015, 10:11 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark