மஹிந்திரா கேயூவி100: வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

Written By:

எஸ்யூவி கார்கள் தயாரிப்பில் தனித்துவம் பெற்ற மஹிந்திரா நிறுவனம், வரும் 15ந் தேதி கேயூவி100 என்ற பெயரில் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. புத்தம் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

குறைவான விலையில் 6 சீட்டர் மாடலாக வரும் இந்த புதிய மினி எஸ்யூவி மாடலுக்கு ரூ.10,000 முன்பணத்துடன், மஹிந்திரா டீலர்களில் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த புதிய மினி எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் விபரம் கசிந்துள்ளது. அவற்றை தற்போது ஸ்லைடரில் பார்க்கலாம். இதை வைத்து போட்டி மாடல்களுடன் ஒப்பிட்டுக் கொள்ள வாய்ப்பு எழுந்துள்ளது.

வேரியண்ட்டுகள் விபரம்

வேரியண்ட்டுகள் விபரம்

மஹிந்திரா கேயூவி100 என்ற புதிய மினி எஸ்யூவி K2 மற்றும் K2+ ஆகியவை பேஸ் வேரியண்ட்டுகளாகவும், K4 மற்றும் K4+ மிட் வேரியண்ட்டுகளாகவும், K6 மற்றும் K6+ உயர் வேரியண்ட்டுகளாகவும், K8 அதி உயர் வேரியண்ட்டாகவும் விற்பனைக்கு வருகிறது.

பேஸ் வேரியண்ட்[K2 மற்றும் K2+]

பேஸ் வேரியண்ட்[K2 மற்றும் K2+]

 • பாடி கலர் பம்பர்கள்
 • ரியர் ஸ்பாய்லர்
 • டில்ட் வசதியுடன் பவர் ஸ்டீயரிங்
 • முன்புற இருக்கைக்கான ஆர்ம் ரெஸ்ட்
 • ஹீட்டருடன் கூடிய மேனுவல் ஏசி
 • கியர்ஷிஃப்ட் இண்டிகேட்டர்
 • ஸ்டீல் வீல்கள்
 • எஞ்சின் இம்மொபைலசர்
 • இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்

K2+ வேரியண்ட்டில் கூடுதலாக டியூவல் ஏர்பேக்குகள் சேர்க்கப்பட்டிருக்கும்.

மிட் வேரியண்ட் [K4 மற்றும் K4+]

மிட் வேரியண்ட் [K4 மற்றும் K4+]

முந்தைய பேஸ் மாடலில் இருக்கும் வசதிகளுடன் சேர்த்து கூடுதலாக கீழ்கண்ட வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

 • பாடி கலர் கதவு கைப்பிடிகள்
 • வீல் ஆர்ச்சுகளுக்கான பிளாஸ்டிக் கிளாடிங்
 • வீல் கேப்புகள் மற்றும் மட் பிளாப்புகள்
 • பவர் விண்டோஸ்
 • சென்ட்ரல் லாக்கிங் வசதி

K4+ வேரியண்ட்டில் கூடுதலாக டியூவல் ஏர்பேக்குகள் சேர்க்கப்பட்டிருக்கிறது.

டாப் வேரியண்ட் [K6 மற்றும் K6+]

டாப் வேரியண்ட் [K6 மற்றும் K6+]

 • க்ரோம் க்ரில்
 • கருப்பு நிற பி பில்லர்
 • ரூஃப் ரெயில்கள்
 • ரூஃப் ஆன்டெனா
 • பக்கவாட்டில் பிளாஸ்டிக் கிளாடிங்குகள்
 • பியானோ பிளாக் வண்ண சென்டர் கன்சோல்
 • பின்புற இருக்கைக்கு ஆர்ம் ரெஸ்ட்
 • பாக்கெட்டில் சாவி இருந்தாலே கதவுகள் தானாக திறக்கும் கீ லெஸ் என்ட்ரி வசதி
 • எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள்
 • குளிர்பானங்கள், திண்பண்டங்களை பாதுகாக்கும் கூல்டு கிளவ் பாக்ஸ்
 • இரவில் காரை நிறுத்தினாலும், சிறிது நேரம் ஒளிர்ந்து வெளிச்சம் தரும் ஃபாலோ மீ ஹெட்லைட்டுகள்
 • காரிலிருந்து இறங்கும்போது தரையில் வெளிச்சம் தரும் படில் விளக்குகள்[முன்புற கதவுகளில் மட்டும்]
 • 4 ஸ்பீக்கர்கள், 2 ட்வீட்டர்களுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
 • பவர் மற்றும் ஈக்கோ என்ற இருவிதமான டிரைவிங் ஆப்ஷன்கள்

K6+ வேரியண்ட்டில் கூடுதலாக டியூவல் ஏர்பேக்குகள் சேர்க்கப்பட்டிருக்கும்.

அதி உயர் வேரியண்ட் [K8 மற்றும் K8+]

அதி உயர் வேரியண்ட் [K8 மற்றும் K8+]

முந்தைய வேரியண்ட்டுகளில் பார்த்த வசதிகள் தவிர்த்து கூடுதலாக கீழ்கண்ட வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கும்.

 • முன்புற பனி விளக்குகள்
 • அனைத்து கதவுகளுக்கும் படில் விளக்குகள்
 • பின்புற கதவுகளில் சில்வர் கைப்பிடிகள்
 • 12 ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல்கள்
 • பகல் நேர ரன்னிங் விளக்குகள்
 • எரிபொருள் சிக்கனம் வழங்கும் மைக்ரோ ஹைபிரிட் சிஸ்டம்

இந்த அனைத்து வசதிகளுடன் K8+ வேரியண்ட்டில் டியூவல் ஏர்பேக்குகள் கூடுதலாக இடம்பெற்றிருக்கிறது.

 

Source

English summary
Here is the details of all features that is likely to be offered on the upcoming Mahindra KUV100.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark