ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வந்தது மஹிந்திரா எக்ஸ்யூவி 500!

Written By:

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மாடல் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டாவின்x 1.6 லிட்டர் டீசல் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து, தற்போது மஹிந்திராவும் இந்த மாடலை உடனடியாக களத்தில் இறக்கியிருக்கிறது. இந்த புதிய ஆட்டோமேட்டிக் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் அறிமுக நிகழ்ச்சியிலிருந்து எமது நிருபர் அஜிங்கியா தரும் படங்கள், தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

கியர்பாக்ஸ் சப்ளையர்

கியர்பாக்ஸ் சப்ளையர்

வாகன உதிரிபாக தயாரிப்பில் புகழ்பெற்ற ஜப்பானிய நிறுவனமான அய்சின் நிறுவனத்திடமிருந்து, மஹிந்திரா எக்ஸ்யூவி 500வுக்கான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை மஹிந்திரா பெற்றிருக்கிறது.

வேரியண்ட்டுகள் விபரம்

வேரியண்ட்டுகள் விபரம்

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் W8 மற்றும் W10 ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். ஆனால், இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் W8 வேரியண்ட்டில் ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகவும், W10 வேரியண்ட்டில் ஃப்ரண்ட் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக மூன்று ஆப்ஷன்களில் தேர்வு செய்து கொள்ள முடியும்.

எஞ்சின்

எஞ்சின்

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியில் 140 பிஎச்பி சக்தியையும், 330 என்எம் டார்க்கையும் வழங்கவல்ல 2.2 லிட்டர் எம்-ஹாக் டீசல் எஞ்சின் தொடர்ந்து உயிர் கொடுக்கிறது. இதனுடன் தற்போது புதிய 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைந்து செயலாற்றும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

டாப் வேரியண்ட்டில் 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அலாய் வீல்கள், எல்இடி பகல்நேர விளக்குகள், ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட்ட வசதியுடன் கண்ணாடி கூரை, 6 விதமான நிலைகளில் உயரத்தை மாற்றியமைக்கக்கூடிய ஓட்டுனர் இருக்கை, கருப்பு மற்றும் பீஜ் என இரட்டை வண்ணக் கலவையிலான உள்பக்க அமைப்பு ஆகியவை டாப் வேரியண்ட்டில் கிடைக்கின்றன.

 பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

ஆட்டோமேட்டிக் மாடலின் டாப் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், நிலைத்தன்மையுடன் காரை செலுத்தும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, சரிவான மலைப்பாதைகளில் செலுத்துவதற்கான ஹில் ஹோல்டு மற்றும் ஹில் டிசென்ட் கன்ட்ரோல் சிஸ்டம், பனி விளக்குகள், வளைவுகளில் கார் திரும்பும்போது, அந்த திசையில் ஒளியை பாய்ச்சும் ஸ்டேட்டிக் ஹெட்லைட்டுகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற முக்கிய அம்சங்கள் டாப் வேரியண்ட்டில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

விலை விபரம்

விலை விபரம்

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் ரூ.15.36 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்பதிவு செய்பவர்களுக்கு டிசம்பர் 5ந் தேதி முதல் இந்த புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவி டெலிவிரி கொடுக்கப்பட உள்ளது.

 
Story first published: Wednesday, November 25, 2015, 13:32 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark