மஹிந்திரா மினிஸ்மார்ட்: வாகனங்களின் பிரச்னைகளை கண்டறியும் புதிய ஆப்

Written By:

மினிஸ்மார்ட் என்ற பெயரில் வாகனங்களின் பிரச்னைகளை கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஆண்ட்ராட்டை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த அப்ளிகேஷன், வாகனங்களின் பிரச்னைகளை எளிதாகவும், விரைவாகவும் தெரிந்து கொள்ள முடிகிறது.

ஒர்க்‌ஷாப் பணியாளர்களும் இந்த ஸ்மார்ஃபோன் மூலம் இயக்கபடும் ஆப்-பை உபயோகிப்பதன் மூலம், கார்களின் பிரச்னைகளை பற்றி எளிதாக தெரிந்து கொள்கின்றனர். தற்போதைய நிலையில், மஹிந்திரா நிறுவனம் மட்டுமே ஸ்மார்ஃபோன் மூலம் இயங்கும் இத்தகைய ஆப் கொண்டுள்ள இந்திய நிறுவனம் ஆகும்.

இந்த மினிஸ்மார்ட் ஆப்-பின் அறிமுகத்தின் மூலம், மஹிந்திரா வாகனத்தை சொந்தமாக்கி கொண்டு, பராமரிக்கும் செலவுகள் குறைந்து கொண்டே இருக்கும். இது ஒர்க்‌ஷாப் பணியாளர்கள் இதை மேலும் திறன் பட இயக்க முடியும், இதனால் அவர்களுக்கு இது மேலும் உபயோகமானதாக இருக்கும்.

கார்களின் பிரச்னைகளை ஆராய, மஹிந்திரா மினிஸ்மார்ட் மிக நவீன தீர்வாக உள்ளது. ஸ்மார்ட்ஃபோனில் இயங்கும் இந்த ஆப், வயர்லஸ் முறையில், வாகனத்துடன் இணைக்கபடுகிறது. காருக்கும், ஆப்-பிற்கும் இடையில் மஹிந்திரா கிளௌட் அடிப்படையிலான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

mahindra-minismart-app-vehicle-diagnostic-solutions-launched

இந்த ஒர்க்‌ஷாப்களுக்கு ஆகும் செலவுகளையும் குறைக்க உள்ளது. இது வரை வாகனங்களின் குறைகளை ஆராய லேப்டாப்கள் மற்றும் வயர்களின் உபயோகத்திற்கு முழுமையான மாற்றாக அமைய உள்ளது.

இந்த ஆப்-பை முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், வாகனங்களின் குறைகளை ஆராயவும், அதன் அனைத்து டீலர்ஷிப்களையும் மஹிந்திரா நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் ஆப்-புடன் மேம்படுத்த உள்ளது.

மினிஸ்மார்ட் ஆப்-பில் உள்ள ஸ்மார்ட் என்பது சிஸ்டம் மானிட்டரிங் அண்ட் ரிபோர்ட்டிங் டூல் என்பதை குறிக்கின்றது. மஹிந்திரா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு உயர்தர வாடிக்கையாளர் திருப்தியை வழங்க நோக்கம் கொண்டுள்ளது.

English summary
Mahindra and Mahindra Automobile giant has launched its all-new android based app called as 'miniSMART'. This 'miniSMART' app would offer quicker and easily accessible diagnostic solutions of the vehicles. It is to be mentioned that, Mahindra is the only Indian OEM that offers such technology.
Story first published: Tuesday, December 22, 2015, 18:50 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark