புது வாழ்வு பெற புதிய கெட்டப்பில் வரும் மினி ஸைலோ!

Written By:

வடிவமைப்பு, வசதிகளில் மேம்படுத்தப்பட்ட மஹிந்திரா குவான்ட்டோ மாடல் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

தற்போது தீவிர சோதனை ஓட்டத்தில் இருக்கும் இந்த புதிய குவான்ட்டோ மாடல், இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டிசைன் மாற்றம்

டிசைன் மாற்றம்

முன்புறத்தில் புதிய க்ரில் அமைப்பு, பம்பர் மற்றும் ஹெட்லைட் க்ளஸ்ட்டர் கொண்டதாக மாற்றப்பட இருக்கிறது. அதாவது, இப்போதைய ட்ரென்ட்டுக்கு ஏற்றவாறு டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

பெட்ரோல் எஞ்சின் மாடல் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய எஞ்சின் ஆப்ஷன் இருக்காது என்பது உறுதியாகிவிட்டது. எனவே, தற்போது இருக்கும் 100 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் டீசல் எஞ்சினில் சில மாற்றங்களை செய்து மேம்படுத்தி அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டு இருக்கிறது.

 இன்டிரியர்

இன்டிரியர்

ரசனையை கொடுக்கும் விதத்தில் இன்டிரியர் அமைப்பில் சில மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கும். மேலும், தரமிக்க புதிய பாகங்களை இன்டிரியரில் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதுதவிர, கூடுதல் வசதிகளும் சேர்க்கப்பட்டிருக்கும்.

 ஏஎம்டி கியர்பாக்ஸ்

ஏஎம்டி கியர்பாக்ஸ்

குவான்ட்டோவின் புதிய மாடலை அதிகம் எதிர்பார்ப்பதற்கு முக்கிய காரணமாக, ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடலிலும் வர இருப்பதை கூறலாம். இதன்மூலம், குவான்ட்டோவின் விற்பனை அதிகரிக்கும் என மஹிந்திரா பெரும் நம்பிக்கை வைத்துள்ளது.

புதிய பெயர்

புதிய பெயர்

புதிய குவான்ட்டோ மாடல், கன்ட்டோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

  
English summary
Now it is most likely that Mahindra will provide a more modern design update to its Quanto model. They have been testing this compact SUV for a while now and a 2015 launch could be on cards.
Story first published: Monday, June 29, 2015, 13:23 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark