ஃபார்முலா- இ பந்தயத்தில் முதல்முறையாக போடியம் ஏறிய மஹிந்திரா ரேசிங் அணி!

Written By:

எலக்ட்ரிக் கார்களுக்கான ஃபார்முலா-இ கார் பந்தயத்தில், முதல் முறையாக மஹிந்திரா ரேசிங் அணி போடியத்தை பிடித்துள்ளது.

எலக்ட்ரிக் கார்களுக்கான முதல் தர ஃபார்முலா-இ கார் பந்தய போட்டிகளில் மஹிந்திரா ரேஸிங் அணியும் பங்கு பெற்று வருகிறது. சீனாவின், பெய்ஜிங்கில் நடைபெற்ற சுற்றில், மஹிந்திரா ரேஸிங் அணியின் சார்பில் பங்கேற்ற நிக் ஹெயிட்ஃபெல்டு மூன்றாவது இடத்தை பிடித்து போடியம் ஏறினார்.

மஹிந்திரா ரேஸிங் அணிக்காக பங்கேற்று வந்த கருண் சந்தோக்கிற்கு பதிலாக, இவர் சமீபத்தில் அணியில் புதிய வீரராக சேர்க்கப்பட்டார். மஹிந்திரா ரேஸிங் அணியின் மற்றொரு வீரரான புரூனோ சென்னா ஏழாவது இடத்தில் இருந்து தனது பந்தயத்தை துவக்கினார்.

Mahindra Racing Secures 1st Podium In Formula-E Championship

மஹிந்திராவின் ஃபார்முலா-இ காருடன் அவர் நன்றாக தான் துவக்கினார். ஒரு கட்டத்தில் ஐந்தாம் இடம் வரை முன்னேறிய புரூனோ, இடையில் தவறவிட்டதால், 13-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

கடந்த ஆண்டை காட்டிலும், ஃபார்முலா-இ சேம்பியன்ஷிப்பின் சீசன் 2 மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது. கடந்த ஆண்டில், போட்டியாளர்கள் தங்களுக்கு விருப்பமான பவர் யூனிட் உபயோகிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். 2015 மற்றும் 2016-ல், அனைவரும் ஒரே மாதிரியான பேட்டரி பேக்கை உபயோகிக்கவேண்டிய நிலை உள்ளது.

அடுத்த ஃபார்முலா-இ ரேஸ் நவம்பர் 7-ஆம் தேதி, மலேசியாவில் உள்ள புத்ரஜெயாவில் நடை பெற உள்ளது.

English summary
Mahindra Racing Secures 1st Podium In Formula-E Championship. Nick Heidfeld started the race in third position and secured third place in Podium Finish.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark