4 கதவுகளுடன் தயாராகும் கொஞ்சம் பெரிய மஹிந்திரா இ2ஓ எலக்ட்ரிக் கார்!

Written By:

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், 4 கதவுகளுடன் கூடிய மஹிந்திரா இ2ஓ எலக்ட்ரிக் கார் தயாரிக்கப்பட்டு வருகிறது.

எலக்ட்ரிக் கார் வாங்க ஆர்வம் உள்ளோர் மத்தியில் இந்த புதிய கார் பெரும் ஆவலைத் தூண்டியிருக்கிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 மஹிந்திரா ரேவா இ2ஓ., கார்

மஹிந்திரா ரேவா இ2ஓ., கார்

தற்போது விற்பனையில் இருக்கும் மஹிந்திரா இ2ஓ எலக்ட்ரிக் காரின் அடிப்படையிலான 4 கதவுகள் கொண்டதாக மேம்படுத்தப்படுகிறது.

 இடவசதி

இடவசதி

விற்பனையில் இருக்கும் மஹிந்திரா இ2ஓ காரைவிட இடவசதியும் அதிகரிக்கப்பட உள்ளது. இதனால், சாதாரண கார்களை போன்ற ஓர் பயண அனுபவத்தை வழங்கும்.

 அதிக சக்தி

அதிக சக்தி

காரின் வடிவமும் பெரிதாக்கப்படுகிறது. எனவே, கூடுதல் எடையை சமாளிக்கும் விதத்தில், அதிக சக்திவாய்ந்த மின் மோட்டாரும், அதற்கு ஏற்ப மின் ஆற்றலை வழங்கும் திறன் கொண்ட பேட்டரியும் கொடுக்கப்படுகிறது.

ஏற்றுமதி

ஏற்றுமதி

4 கதவுகள் கொண்ட புதிய மஹிந்திரா இ2ஓ கார் முதலில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. மேலும், தனது எலக்ட்ரிக் கார் விற்பனையை அதிகரிக்கும் விதத்தில், இங்கிலாந்தில் ஒரு கார் வினியோக மையத்தையும் திறக்க மஹிந்திரா திட்டமிட்டு இருக்கிறது.

விற்பனை அதிகரிப்பு

விற்பனை அதிகரிப்பு

மின்சார வாகனங்களுக்கான மத்திய அரசின் மானிய திட்டம் அமலுக்கு வந்த பிறகு, மஹிந்திரா இ2ஓ எலக்ட்ரிக் காரின் விற்பனை இரு மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, புதிய எலக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்யும் முனைப்பில் மஹிந்திரா தீவிரமாக இறங்கியிருக்கிறது. எனவே, இந்த புதிய 4 கதவுகள் கொண்ட இ2ஓ காரும் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யும் திட்டமும் மஹிந்திராவிடம் உள்ளது.

அறிமுகம்

அறிமுகம்

அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 4 கதவுகள் கொண்ட மஹிந்திரா இ2ஓ கார் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
English summary
Mahindra (M&M) on Wednesday said it was working on a four-door variant of its electric car E2O that would be exported to Europe.
Story first published: Monday, October 19, 2015, 13:51 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark