ரூ.4.5 லட்சத்தில் வரும் மஹிந்திரா மினி எஸ்யூவி... பெயர் விபரம் கசிந்தது!

Written By:

ரூ.4.5 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படும் புதிய மஹிந்திரா மினி எஸ்யூவியின் பெயர் விபரம் கசிந்துள்ளது.

தற்போது மஹிந்திரா எஸ்101 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்டு வரும் இந்த புதிய மஹிந்திரா மினி எஸ்யூவிக்கு கேயூவி100 என்ற பெயரில் வர இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

புதிய பெயர்

புதிய பெயர்

இன்று இணையதளங்களில் கசிந்திருக்கும் மஹிந்திரா கேயூவி100 லோகோவை படத்தில் காணலாம். இதுவரை சியூவி100 அல்லது எக்ஸ்யூவி100 என்ற பெயரில் இந்த புதிய மினி எஸ்யூவி வரலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனாலும், மஹிந்திரா நிறுவனம் இந்த லோகோவை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

இந்த புதிய மினி எஸ்யூவியில் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் அல்லது 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எஞ்சின்களை தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மஹிந்திரா உருவாக்கியுள்ளது.

வசதிகள்

வசதிகள்

டச்ஸ்கிரீன் ஆடியோ சிஸ்டம், ஸ்கார்ப்பியோவில் இடம்பெற்றிருக்கும் ஸ்டீயரிங் வீல், பவர் விண்டோஸ், டியூவல் ஏர்பேக்ஸ், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும். மேலும், புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், 15 இன்ச் வீல்கள் போன்றவையும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

 டிசைன்

டிசைன்

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் டிசைன் தாத்பரியங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இதனை ஒரு குட்டி மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியாகவும் இருக்கும் என்பது எதிர்பார்ப்பு!

இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த புதிய மினி எஸ்யூவியில் 5 பேர் பயணிக்கலாம். அதேநேரத்தில், ஹேட்ச்பேக் கார்களைவிட அதிக இடவசதி கொண்டதாக இருக்கும்.

விலை

விலை

ரூ.4.50 லட்சம் முதல் ரூ.6.50 லட்சம் வரையிலான விலைப் பட்டியலில் வர இருக்கிறது. எனவே, இது பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களுக்கு நேரடி போட்டியை கொடுக்கும்.

 
English summary
Mahindra's New Mini SUV Might Be Called KUV100.
Story first published: Monday, September 14, 2015, 11:23 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark