எமது வாசகர் கேமராவில் சிக்கிய மஹிந்திரா மினி எஸ்யூவி!

Written By:

மஹிந்திரா டியூவி300 காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டுக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அடுத்து மீடியாவின் கவனம் முழுவதும் மஹிந்திராவின் அடுத்த புதிய மினி எஸ்யூவி மீது விழுந்திருக்கிறது.

மஹிந்திரா எஸ்101 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்டு வரும், இந்த புதிய மினி எஸ்யூவிக்கு மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி100 என்ற பெயரில் அறிமுகம் செய்ய இருப்பதாக வெளியானத் தகவலும், அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

Mahindra S101
 

தற்போது தொடர்ந்து தீவிர சாலை சோதனைகளில் இருந்து வரும் மஹிந்திரா எஸ்101 எஸ்யூவி ஸ்பை ஷாட்டுகள் மூலமாக, ஆட்டோமொபைல் இணையதளங்களை குளிர்வித்து வருகிறது.

இந்தநிலையில், சென்னை அருகே டெஸ்ட் செய்யப்பட்டு கொண்டிருந்த மஹிந்திரா எஸ்101 மினி எஸ்யூவியை, எமது வாசகர் சுதீப் ரஞ்சன் ஷர்மா படம் பிடித்து அனுப்பியிருக்கிறார்.

யுட்டிலிட்டி கார் மார்க்கெட்டில் 90 சதவீதம் டீசல் மாடல்களே விற்பனையாகின்றன. இந்தநிலையில், டீசல் மாடல் மட்டுமின்றி, இந்த எஸ்யூவி புத்தம் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலிலும் அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டு இருக்கிறது.

இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் நிறுவனத்துடன் இணைந்து மஹிந்திரா உருவாக்கியிருக்கிறது.

அதேபோன்று, டியூவி 300 எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டிருக்கும், அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் இந்த புதிய மினி எஸ்யூவியில் இடம்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Mahindra is answering exactly that need with its upcoming vehicle code named the S101. Many spy shots have emerged of the vehicle being tested in India and the latest is when Sudeep Ranjan Mishra, an avid reader of DriveSpark and a very good friend spotted the S101 being tested in Chennai.
Story first published: Saturday, September 12, 2015, 14:24 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark