மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலின் விபரம்

By Saravana

ஸ்கார்ப்பியோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் ஓர் நற்செய்தி இன்று வெளியாகியுள்ளது. ஆம், நீண்ட நாள் எதிர்பார்ப்பான மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு வந்துவிட்டதாக டீலர் வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளது.

எக்கானமிக் டைம்ஸ் தளத்தின் வாயிலாக இந்த செய்தி இணையதளங்களில் பரவியுள்ளது. அந்த செய்தியின்படி, புதிய ஸ்கார்ப்பியோ ஆட்டோமேட்டிக் மாடல் டாப் வேரியண்ட்டாக விற்பனைக்கு கிடைக்கும்.

இரு வேரியண்ட்டுகள்

இரு வேரியண்ட்டுகள்

மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் S10 டாப் வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கும். ஆனால், 2 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இரு மாடல்களில் கிடைக்கும்.

 வித்தியாசம்

வித்தியாசம்

மேனுவல் கியர்பாக்ஸ் மாடலுக்கும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலுக்கும் தோற்றத்தில் அதிக வித்தியாசம் இருக்காது. பக்கவாட்டிலும், பின்புறத்திலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என்பதை தெரிவிக்கும் ஆட்டோ என்ற பேட்ஜ் கொடுக்கப்பட்டிருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலில் 2,179சிசி எம்-ஹாக் டீசல் எஞ்சின் இருக்கிறது. இந்த எஞ்சின் 4,000 ஆர்பிஎம்.,மில் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரையும், 1,800 முதல் 2,800 ஆர்பிஎம்.,மில் 280 என்எம் என்ற அதிகபட்ச டார்க்கையும் வெளிப்படுத்தும்.

 இருக்கை வசதி

இருக்கை வசதி

புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஆட்டோமேட்டிக் மாடல் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் என்ற இரு இருக்கை அமைப்பு கொண்ட மாடல்களில் தேர்வு செய்து கொள்ளலாம்.

வசதிகள்

வசதிகள்

இது டாப் வேரியண்ட் என்பதால் பல சிறப்பு வசதிகள் உள்ளன. டச்ஸ்கிரீன் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வாய்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், ஜிபிஎஸ் நேவிகேஷன், ரெயின் சென்சிங் வைப்பர், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலில் டியூவல் ஏர்பேக்ஸ், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஆன்ட்டி தெஃப்ட் அலாரம், எஞ்சின் இம்மொபைலைசர் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது.

Most Read Articles
English summary
Mahindra has launched the automatic version of the Scorpio. It will be available in the S10 trim of the two-wheel drive as well as the four-wheel drive version. The new automatic version of the Scorpio will be offered as either a 7 seater or as an 8 seater.
Story first published: Wednesday, July 15, 2015, 17:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X