மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு வந்தது!

Written By:

மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் டாப் வேரியண்ட்டில் மட்டும் இந்த புதிய மாடல் கிடைக்கும். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

இரு மாடல்கள்

இரு மாடல்கள்

ஸ்கார்ப்பியோவின் ஆட்டோமேட்டிக் மாடல் 2 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 4 டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

ஸ்கார்ப்பியோ ஆட்டோமேட்டிக் மாடல் 7 பேர் மற்றும் 8 பேர் அமர்ந்து செல்வதற்கான இருக்கை அமைப்புடன் கிடைக்கும்.

 எஞ்சின்

எஞ்சின்

புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலில் 2.2 லிட்டர் எம்ஹாக் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 120 எச்பி பவரையும், 280என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், புருவங்கள் வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், 6 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்ஸ், புதிய 17 இன்ச் அலாய் வீல்கள் போன்ற சிறப்பம்சங்களை நிரந்தரமாக கொண்டுள்ளது.

விலை விபரம்

விலை விபரம்

  • 2 வீல் டிரைவ் மாடல்: ரூ.13,13,701 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை
  • 4 வீல் டிரைவ் மாடல்: ரூ.14,32,976 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை
 
English summary
Mahindra has finally provided its new generation Scorpio with an automatic transmission. It will be available only in the S10 variant and will be offered on both 4WD and 2WD variants.
Story first published: Wednesday, July 29, 2015, 9:45 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark