மஹிந்திரா ரேவாவின் டிரைவரில்லாமல் இயங்கும் கார்... சோதனைக்கு ரெடி!

Posted By:

டிரைவரில்லாமல் இயங்கும் தானியங்கி கார்களை சோதனை நடத்துவதற்காக, இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் அரசுகளிடம் மஹிந்திரா ரேவா நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. இதற்காக, அந்நாட்டு அரசுகளிடம் மஹிந்திரா ரேவா நிறுவனம் கான்செப்ட் கார் விபரங்களை சமர்ப்பித்துள்ளது.

மஹிந்திரா ரேவா நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் எக்கானமிக் டைம்ஸ் இதழிடம் இத்தகவலை தெரிவித்துள்ளார். இந்த தகவல் உலக ஆட்டோமொபைல் துறையின் கவனத்தை மஹிந்திரா பக்கம் திருப்பியிருக்கிறது. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

பெங்களூரில் தயாரிப்பு

பெங்களூரில் தயாரிப்பு

பெங்களூரிலுள்ள மஹிந்திரா ரேவா மின்சார கார் தொழிற்சாலையில், இந்த புதிய டிரைவரில்லா கார்கள் சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றின் புரோட்டோடைப் மாடல்களை பொது சாலைகளில் வைத்து சோதனை நடத்துவதற்காக இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் அரசிடம் மஹிந்திரா ரேவா நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. இதற்கா, புரோட்டோடைப் மாடலின் விபரங்களுக்கான ஆதாரங்கள் அரசுகளிடம் சமர்பிக்கப்பட்டிருக்கிறதாம்.

டிரைவரில்லா தொழில்நுட்பம்

டிரைவரில்லா தொழில்நுட்பம்

இந்த டிரைவரில்லா கார்களில் கூடுதலாக சென்சார்கள், கேமராக்களை பொருத்தியிருப்பதுடன், காரை கட்டுப்படுத்துவதற்கான சாப்ட்வேருடன் கூடிய சிறிய கம்ப்யூட்டருடன் பொருத்தப்பட்டு பெங்களூர் ஆலையில் முதல்கட்ட சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கிலாந்து, சிங்கப்பூர் அரசுகள் அனுமதி வழங்கியவுடன் அங்கு வைத்து பொது சாலைகளில் சோதனைகளை நடத்த மஹிந்திரா திட்டமிட்டிருக்கிறது.

டெக் மஹிந்திரா பங்களிப்பு

டெக் மஹிந்திரா பங்களிப்பு

பெங்களூரில் உள்ள மஹிந்திரா ஆராய்ச்சி மையம் மற்றும் டெக் மஹிந்திரா தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து டிரைவரில்லா காருக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியிருப்பதுடன், அதனை மேம்படுத்தும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பு நிலை மாடல்

தயாரிப்பு நிலை மாடல்

புரோட்டோடைப் மாடல்கள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட பின்னர் தயாரிப்பு நிலை மாடலை வெளியிட மஹிந்திரா ரேவா திட்டமிட்டிருக்கிறது. தயாரிப்பு நிலை மாடல் வெளியிடுவதற்கு 3 முதல் 4 ஆண்டுகள் பிடிக்கும் என மஹிந்திரா ரேவா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

தகவல் திரட்டும் பணிகள்

தகவல் திரட்டும் பணிகள்

தற்போது 2,000 மஹிந்திரா ரேவா இ2ஓ மின்சார கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த கார்களில் டிரைவரில்லாமல் இயங்கும் காருக்கு தேவையான விபரங்களை பெறுவதற்கான சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளனவாம். இந்த சென்சார்களிலிருந்து கிடைக்கும் தகவல்களை வைத்து டிரைவரில்லா கார் சாஃப்ட்வேரை மேம்படுத்தி வருவதாகவும் மஹிந்திரா ரேவா அதிகாரி கூறியிருக்கிறார்.

சவால்

சவால்

டிரைவரில்லா கார்களை தயாரிப்பில் இருக்கும் மிகப்பெரிய சவால், ஒவ்வொரு நாட்டின் விதிமுறைகளுக்கு தக்கவாறு மாற்றுவதே என தகவலை வெளியிட்ட அதிகாரி கூறியிருக்கிறார். மேலும், இங்கிலாந்து, சிங்கப்பூர் நாடுகளில் சாலை சோதனை ஓட்டங்கள் முடிந்த பின்னர், இந்திய சாலைநிலைகளுக்கு ஏற்றவாறு காரில் மாற்றங்களை செய்யப்படும் என்று அவர் கூறினார்.

பரிசுப் போட்டி

பரிசுப் போட்டி

டிரைவரில்லாமல் இயங்கும் கார்களை தயாரிப்பதற்காக ஒரு பரிசுப்போட்டியை ஏற்கனவே மஹிந்திரா சமீபத்தில் அறிவித்திருக்கிறது. இதன்படி, இந்திய போக்குவரத்து நிலைகளுக்கு ஏற்ற டிரைவரில்லா கார் தொழில்நுட்பத்தை உருவாக்கி தர வேண்டும். இந்த போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு 7 லட்சம் டாலர் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த போட்டி 3 ஆண்டுகளில் மூன்று கட்டங்களாக நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முதல் இந்திய நிறுவனம்

முதல் இந்திய நிறுவனம்

கூகுள், தெஸ்லா, ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ், நிசான் உள்ளிட்ட நிறுவனங்களின் வரிசையில் தற்போது இந்தியாவின் மஹிந்திரா நிறுவனமும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்க உள்ளது. இதன்மூலம், டிரைவரில்லா காரை தயாரிக்கும் இந்தியாவின் முதல் நிறுவனம் என்ற பெருமையை மஹிந்திரா பெற உள்ளது.

 
English summary
Driverless cars have become the trending technology of today. Companies like Google, BMW, Audi and Tesla are on the forefront of this development and the latest company who has taken this step seriously is the Mahindra Group. Yes, Mahindra's electric car division, Reva has submitted proof of concepts for driverless cars in the UK and Singapore.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark