மஹிந்திரா டியூவி300 காம்பேக்ட் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது - முழு விபரம்

Posted By:

ரூ.6.90 லட்சம் ஆரம்ப விலையில், மஹிந்திராவின் புத்தம் புதிய டியூவி 300 எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. புனே அருகில் சகனில் உள்ள மஹிந்திரா ஆலையில் நடந்த அறிமுக விழாவில் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

எஸ்யூவி வகை வாகனங்களில் முதல்முறையாக ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட 7 சீட்டர் மாடலாகவும் இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவியின் சிறப்பம்சங்கள், விலை, படங்களை ஸ்லைடரில் காணலாம்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட் என்பதை நிரூபிக்கும் விதத்தில், மற்றுமொரு கம்பீரமான டிசைன் கொண்ட மாடலாக டியூவி300 எஸ்யூவியை மஹிந்திரா வடிவமைத்துள்ளது. மஹிந்திராவின் மூன்றாம் தலைமுறை பாடி ஆன் ஃப்ரேம் சேஸீயில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

புதிய மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவி T4, T4+, T6, T+, T6 AMT, T8, T8+ AMT ஆகிய 6 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

4 மீட்டருக்குள் அடக்கப்பட்டிருக்கும், இந்த எஸ்யூவியில் 5 பேர் தாராளமாக அமர்ந்து பயணிக்கலாம். மேலும், குவான்ட்டோ போன்றே இந்த எஸ்யூவியிலும், பின்புறத்தில், இரண்டு ஜம்ப் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆக அதிகபட்சமாக 7 பேர் வரை பயணிக்கும் வசதி கொண்டது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவியில் புதிய 1.5 லிட்டர் எம்-ஹாக் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட ஆப்ஷன்களில் கிடைக்கும்.

மைலேஜ்

மைலேஜ்

புதிய எஞ்சினுடன் வந்திருக்கும் மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவி லிட்டருக்கு 18.49 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வசதிகள்

வசதிகள்

  • டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
  • புளூடூத், யுஎஸ்பி, ஆக்ஸ் - இன் இணைப்பு வசதிகள்
  • டியூவல் டோன் டேஷ்போர்டு ஆகியவற்றை குறிப்பிட்டு கூறலாம்.
பூட் ஸ்பேஸ்

பூட் ஸ்பேஸ்

இந்த எஸ்யூவியில் 384 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ஸ்பேஸ் உள்ளது. இருக்கைகளை மடக்கும்போது, 720 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக மாற்றிக் கொள்ள முடியும்.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

பேஸ் மாடல்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்ஸ் போன்ற முக்கிய பாதுகாப்பு தொழில்நுட்ப அம்சங்கள் ஆப்ஷனலாகவும், டாப் வேரியண்ட்டுகளில் நிரந்தர அம்சமாகவும் இடம்பெற்றிருக்கிறது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

வெர்வ் புளூ, க்ளேசியர் புளூ, டைனமோ ரெட், மெஜெஸ்டிக் சில்வர், போல்டு பிளாக், மோல்டென் ஆரஞ்ச் மற்றும் காம்பேட் பேட்டில் க்ரீன் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். இதில், காம்பேட் பேட்டில் க்ரீன் என்ற வண்ணம் இந்த எஸ்யூவியின் பிரத்யேக வண்ணமாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை விலை விபரம்

சென்னை விலை விபரம்

டி4: ரூ.7,13,635

டி4+: ரூ.7,49,257

டி6: ரூ.7,79,791

டி6+: ரூ.8,05,235

டி6+ ஏஎம்டி: ரூ.8,78,515

டி8: ரூ.8,66,302

டி8 ஏஎம்டி: ரூ.9,39,582

அனைத்தும் சென்னை எக்ஸ்ஷோரூம் விலை விபரம். மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ரூ.6.90 லட்சம் என்ற ஆரம்ப விலை, புனே எக்ஸ்ஷோரூம் விலையாகும்.

 
English summary
The much awaited Mahindra TUV 300 has been launched in India. This is a very important product for Mahindra as it has been designed based on an all new platform.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark