விற்பனையில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டை ஓவர்டேக் செய்த மஹிந்திரா டியூவி300

Posted By:

மஹிந்திரா நிறுவனத்தின் டியூவி300 எஸ்யூவி முதல் மாதத்திலேயே, சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது.

டியூவி300 கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு மாதத்திற்குள் 4,300 கார்கள் விற்பனையாகியுள்ளது. காம்பேக்ட் எஸ்.யூ.வி ரக கார்களில், மஹிந்திரா நிறுவனத்தின் டியூவி300, ஃபோர்ட் இந்தியாவின் எகோஸ்போர்ட் எஸ்யூவியின் விற்பனையை முந்தியுள்ளது.

கடந்த மாதம் 3,142 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், அனைத்து கார்களையும் விட, அறிமுகம் செய்யப்பட்டு முதல் மாதத்திலேயே 7,320 க்ரெட்டா கார்களை விற்று ஹூண்டாய் நிறுவனமே முன்னணியில் உள்ளது.

இந்த டியூவி300 காம்பேக்ட் எஸ்.யூ.வி-யின் ஒட்டுமொத்த வடிவமைப்பு, பீரங்கிகளை மனதில் வைத்து உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மஹிந்திரா டியூவி300 கார்கள் புதிய எம்ஹாக்80 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜினுடன் வருகிறது. இது மேனுவல் அல்லது ஏ.எம்.டி. கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 83.5 (பி.ஹெச்.பி எனப்படும்) பிரேக் ஹார்ஸ்பவரையும், 230 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில், அடிப்படை வேரியண்ட்கள், தேர்வு முறை பாதுகாப்பு உபகரணங்களுடன் வருகிறது. இந்த டியூவி300 கார்களில் ஓட்டுனர் மற்றும் பயணிகளுக்கு ஏர்-பேகுகள், சீட்பெல்ட் ரிமைண்டர், டிஜிட்டல் இம்மோபலைசர், ஆட்டோ டோர் லாக், ஈபிடி-யுடன் வரும் ஏபிஎஸ் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் கிடைக்கிறது.

மஹிந்திராவின் இந்த டியூவி300 காம்பேக்ட் எஸ்.யூ.வி 5 + 2 என்ற அடிப்படையிலான இருக்கை முறையுடன் வருகிறது. காம்பேக்ட் எஸ்.யூ.வி-களில் மிக குறைந்த விலையில் விற்கப்படும் மஹிந்திராவின் டியூவி300 காம்பேக்ட் எஸ்.யூ.வி, ரூபாய் 6,90,000 (எக்ஸ்-ஷோரூம் மும்பை) விலையில் கிடைக்கின்றது.

English summary
Mahindra TUV300 Achieved Sales Milestone Within a Month. The TUV300 has managed to sell over 4,300 units within first month of its launch. and has overtaken several of its competitors in terms of first month sales.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark