செப்.10 -ல் விற்பனைக்கு வருகிறது புதிய மஹிந்திரா டியூவி300 மினி எஸ்யூவி!!

Posted By:

அடுத்த மாதம் 10ந் தேதி புதிய மஹிந்திரா டியூவி300 மினி எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மஹிந்திரா நிறுவனம் சற்றுமுன் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Mahindra TUV300
 

புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கபப்பட்டிருக்கும் இந்த புதிய மினி எஸ்யூவி 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

பீரங்கியின் தோற்ற சாயலும், கட்டுமானத் தன்மையையும் மனதில் வைத்து இந்த புதிய மினி எஸ்யூவியை வடிவமைத்திருப்பதாக மஹிந்திரா கூறியிருக்கிறது.

எஞ்சின் பற்றிய முழுமையான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. மஹிந்திராவின் நவீன தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட 1.5 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சினுடன் வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

ரூ.6 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய மினி எஸ்யூவியை மஹிந்திரா விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Mahindra has confirmed to us that their TUV300 compact SUV will be launched on 10th of September, 2015. They had previously unveiled its name and design language during July, 2015.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark