கொஞ்சம் 'க்ளோசப்'பில் மஹிந்திரா டியூவி300வை பார்க்கலாம்... செப்.1 முதல் முன்பதிவு!

Posted By:

அடுத்த மாதம் 10ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பு கூட்டியுள்ளன.

இந்தநிலையில், வரும் 1ந் தேதி முதல் இந்த புத்தம் புதிய எஸ்யூவி மாடலுக்கு முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட உள்ளது. மேலும், கூடுதல் படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளன. அவற்றை ஸ்லைடரில் காணலாம்.

 படங்கள்

படங்கள்

விளம்பர படம் ஷூட்டிங்கிற்காக எடுத்து வரப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த மஹிந்திரா டியூவி300 படங்களை, டீம் பிஎச்பி உறுப்பினர் நேற்று வெளியிட்டார். இன்று கார்வாலே தளத்தில், டீலர்ஷிப்பில் நிறுத்தியிருந்த படங்களை வெளியிட்டிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

மஹிந்திரா குவான்ட்டோவுக்கு அடுத்து, 4 மீட்டர் நீளத்துக்கும் குறைவான இரண்டாவது காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக இது வெளிவருகிறது. மேலும், குவான்ட்டோ எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் போன்ற ஆப்ஷன்களில் வருகிறது. 4 வீல் டிரைவ் ஆப்ஷன் வழங்கப்படாது என்று தெரிகிறது.

 விலை

விலை

ஆரம்ப நிலை மாடல் ரூ.6 லட்சத்திலும், டாப் வேரியண்ட் ரூ.10 லட்சத்திலும் வரும் என்று தகவல்கள் கூறுகின்றன. அதேநேரத்தில், ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் நடுத்தர ரக மாடலில் வழங்கப்படும் என்று தெரிகிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

இந்த புதிய எஸ்யூவியின் ஸ்டீயரிங் வீல் படத்தை சில நாட்களுக்கு முன் மஹிந்திரா வெளியிட்டிருக்கிறது. ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பது போன்று இந்த ஸ்டீயரிங் வீல் இன்டிரியரின் நவநாகரீக அம்சங்களை உணர்த்துவதாக இருக்கிறது.

பரிசுப் போட்டி

பரிசுப் போட்டி

இந்த எஸ்யூவி மாடலை பிரபலப்படுத்தும் நோக்கில், பரிசுப் போட்டி ஒன்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘Are You Tough Enough' என்ற பெயரிலான இந்த பரிசுப் போட்டியில், மஹிந்திராவின் சமூக வலைதள பக்கங்கள் மூலமாக கேட்கப்படும் எளிமையான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த பரிசுப் போட்டி அமைகிறது. பரிசு விபரம் அடுத்த ஸ்லைடில் காணலாம்.

பரிசு விபரம்

பரிசு விபரம்

அதிர்ஷ்டசாலிகளில் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் பரிசாக மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது. இரண்டாம் இடம் பிடிக்கும் 5 பேருக்கு ஐ-பேட் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கூடுதல் படங்கள்

கூடுதல் படங்கள்

மஹிந்திரா டியூவி 300வின் கூடுதல் படங்கள்...

Source: Car Wale 

English summary
Pre-booking of Mahindra TUV300 will commence from 1st of September, 2015 across India. It is expected to be offered only with diesel engine and no 4WD will be provided in this built like tank model.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark