மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியானது!

By Saravana

அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய மஹிந்திரா டியூவி 300 காம்பேக்ட் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.

குறைவான விலையிலான மஹிந்திரா எஸ்யூவியாக வரும் என்று கருதப்படுவதால், இந்த எஸ்யூவி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்

டிசைன்

பீரங்கி போன்ற ஒரு எஸ்யூவியை வடிவமைக்க வேண்டும் என்ற நோக்கத்தை மனதில் வைத்து இந்த புதிய எஸ்யூவியை வடிவமைத்து இருப்பதாக மஹிந்திரா தெரிவித்திருக்கிறது. பெட்டி போன்ற வடிவமைப்புடன், பார்ப்பதற்கு கட்டுறுதியான மாடலாகவே தெரிகிறது. முகப்பில் மஹிந்திராவின் ஆஸ்தான க்ரில் அமைப்பு இடம்பெற்றிருக்கிறது.

Photo Source: Anything On Wheels

எஞ்சின்

எஞ்சின்

பெயரை மட்டுமே மஹிந்திரா வெளியிட்டு இருக்கிறது. எஞ்சின் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த புதிய எஸ்யூவியில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யூவியில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

Photo Source: Anything On Wheels

7 சீட்டர்

7 சீட்டர்

சமீபத்தில் வெளியான ஸ்பை படங்களில் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியில் 7 பேர் வரை அமர்ந்து செல்வதற்கான இருக்கை அமைப்புடன் காட்சியளித்தது. குவான்ட்டோ போன்றே 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி மாடலாக இருந்தாலும், 7 பேர் செல்வதற்கான இருக்கை வசதியை பெற்றிருக்கும்.

 உற்பத்திக்கு ரெடி

உற்பத்திக்கு ரெடி

இந்த புதிய எஸ்யூவி மாடல் உற்பத்திக்கு தயாரான மாடலாகவே ஸ்பை படங்கள் மூலம் காட்சியளிக்கிறது. எனவே, எந்த குழப்பமும் இல்லாமல், அடுத்த மாதம் விற்பனைக்கு வநதுவிடும்.

உற்பத்தி

உற்பத்தி

மராட்டிய மாநிலம், புனே அருகில் உள்ள சகன் தொழிற்பேட்டையில் உள்ள மஹிந்திரா ஆலையில் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி உற்பத்தி செய்யப்பட உள்ளது. நம் நாட்டு மார்க்கெட் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் இந்த புதிய எஸ்யூவியை விற்பனை செய்ய மஹிந்திரா திட்டமிட்டிருக்கிறது.

Most Read Articles
English summary
Mahindra TUV300 Production Ready Version Spied.
Story first published: Tuesday, August 11, 2015, 10:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X