முக்காடை விலக்கிய மஹிந்திரா டியூவி300... 'லபக்'கிய கேமரா கண்கள்!!

Written By:

அடுத்த மாதம் 10ந் தேதி விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் படங்கள் வெளியாகியிருக்கின்றன.

ராஜஸ்தான் மாநிலம், பிகானேரில் விளம்பர ஷூட்டிங்கிற்காக இந்த எஸ்யூவி எடுத்து வரப்பட்டுள்ளது. அப்போது, டீம் பிஎச்பி உறுப்பினர் ஒருவர் இந்த எஸ்யூவியை படமெடுத்து பகிர்ந்துள்ளார். முதல்முறையாக வெளியாகி இருக்கும் மஹிந்திரா டியூவி300 தயாரிப்பு நிலை மாடலின் ஸ்பை படங்களை ஸ்லைடரில் காணலாம்.

தோற்றம்

தோற்றம்

பீரங்கியின் சாயலின் அடிப்படையில் இந்த எஸ்யூவியை உருவாக்கி இருப்பதாக மஹிந்திரா ஏற்கனவே தெரிவித்துவிட்டது. இந்த நிலையில், ஸ்பை படங்களின் மூலமாக சில குறிப்பிட்ட அம்சங்களை காண முடிகிறது. முன்புற க்ரில் அமைப்பு பார்த்தவுடனே, ஜீப் செரோக்கீ எஸ்யூவியை நினைவூட்டுகிறது.10 ஸ்போக் அலாய் வீல்கள் சிறப்பு சேர்ப்பதுடன், பக்கவாட்டில் பாடி லைன் மிக உயரத்தில் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பின்புற தோற்றம்

பின்புற தோற்றம்

பின்புறம் குவான்ட்டோவை ஒத்திருப்பது போன்ற தோற்றத்தை கொண்டிருக்கிறது. பின்புற கதவில் ஸ்பேர் வீல் பொருத்தப்பட்டுள்ளது.

7 சீட்டர்

7 சீட்டர்

இந்த எஸ்யூவி 7 சீட்டர் மாடலாக வருவதும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடைசி வரிசையில் 2 ஜம்ப் இருக்கைகள் இருக்கும். கருப்பு நிற டேஷ்போர்டு, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புளூடூத் கனெக்ட்டிவிட்டி போன்ற சிறப்பம்சங்களை கொண்டிருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

மஹிந்திரா குவான்ட்டோவில் பயன்படுத்தப்படும் அதே 3 சிலிண்டர் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் இந்த புதிய எஸ்யூவி மாடல் வருகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, ஏஎம்டி மாடலிலும் வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

விலை

விலை

ரூ.6 லட்சம் ஆரம்ப விலையில் நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போது விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 எஸ்யூவி மாடலாக இருந்து வரும் பொலிரோவின் மார்க்கெட்டையும் பதம் பார்க்கும். ஊரக மார்க்கெட்டை குறிவைத்து இந்த மாடலை மஹிந்திரா அறிமுகம் செய்கிறது.

Source: Team BHP

English summary
Mahindra TUV300 SUV spy shots hits online. The new suv model has been fully revealed through these spyshots from Team-bhp.com.
Story first published: Friday, August 28, 2015, 17:32 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark