முதலாவதாக பெல் நிறுவனத்துக்கு எலக்ட்ரிக் வெரிட்டோ கார்கள்: மஹிந்திரா தகவல்

Written By:

கடந்த 5ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டது. அதேநாளில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு அதிகம் விளைவிக்காத தனது எலக்ட்ரிக் வெரிட்டோ கார் பற்றிய இனிப்பான தகவலை வெளியிட்டிருக்கிறது.

அகாதகப்பட்டது, முதல் பேட்ஜில் தயாரிக்கப்பட்ட 5 எலக்ட்ரிக் வெரிட்டோ கார்களை பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு (BHEL) டெலிவிரி கொடுக்க உள்ளதாக மஹிந்திரா தெரிவித்திருக்கிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

அறிமுகம்

அறிமுகம்

2012ம் ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முதல்முறையாக எலக்ட்ரிக் வெரிட்டோ காரை மஹிந்திரா பார்வைக்கு வைத்திருந்தது. அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலும் சிறிய மாற்றங்களுடன் கூடிய எலக்ட்ரிக் வெரிட்டோ கார்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனால், விரைவிலேயே அந்த கார்கள் மார்க்கெட்டுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

 தாமதம்

தாமதம்

ஆனால், மத்திய அரசிடமிருந்து எலக்ட்ரிக் கார்களுக்கான எதிர்பார்த்த அளவு உதவிகள் மற்றும் மானிய திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. இதனால், எலக்ட்ரிக் வெரிட்டோ காரின் விற்பனையை மஹிந்திரா தாமதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, இதுவரை தயாரிக்கப்பட்ட 5 எலக்ட்ரிக் வெரிட்டோ கார்களை பெல் நிறுவனத்துக்கு டெலிவிரி கொடுக்க இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

டிசைன் மாற்றம்

டிசைன் மாற்றம்

சாதாரண மாடலுக்கும், எலக்ட்ரிக் வெரிட்டோ மாடலுக்கும் தோற்றத்தில் அதிக வித்தியாசங்கள் இல்லை. புகைப்போக்கி குழாய் இல்லை, அதுபோன்றே, எரிபொருள் மூடி கொடுக்கப்பட்டு இருக்கும் இடத்தில், சார்ஜ் செய்வதற்கான பாயிண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ரேஞ்ச்

ரேஞ்ச்

ஒருமுறை முழுமையாக பேட்டரி சார்ஜ் ஆவதற்கு 7 மணி நேரம் பிடிக்கும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 கிமீ முதல் 100 கிமீ தூரம் வரை இந்த காரை இயக்க முடியும். அதேபோன்று, மணிக்கு 85 கிமீ வரை வேகம் பிடிக்கும்.

வர்த்தக ரீதியிலான அறிமுகம்

வர்த்தக ரீதியிலான அறிமுகம்

அடுத்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், இந்த எலக்ட்ரிக் வெரிட்டோ காரை மஹிந்திரா விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாக்சி மார்க்கெட்டை குறிவைத்து இந்த எலக்ட்ரிக் காரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மஹிந்திரா திட்டமிட்டிருக்கிறது.

 
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra will supply first badge of Verito EV to Bharat Heavy Electricals Limited (BHEL).
Story first published: Monday, June 8, 2015, 11:51 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos