நாளை ரிலீசாகும் மாருதி ஸ்விஃப்ட் காரின் லிமிடேட் எடிசன் பற்றிய தகவல்கள்!!

Written By:

பண்டிகை காலத்தில் கார் வாங்க காத்திருப்பவர்களை கவர்ந்திழுக்கும் அம்சங்களுடன் மாருதி ஸ்விஃப்ட் காரின் லிமிடேட் எடிசன் மாடல் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் க்ளோரி எடிசன் என்ற பெயரில் அறிமுகமாக இருக்கும், இந்த புதிய லிமிடேட் எடிசன் மாடலில் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் கண்களை கவரும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

வெளிப்புற அம்சங்கள்

வெளிப்புற அம்சங்கள்

வெள்ளை வண்ணக் காரில் கருப்பு- சிவப்பு வண்ணக் கலவையை சற்று தூக்கலாகவே கொடுத்து தோற்றத்திற்கு கவர்ச்சியூட்டியுள்ளனர். கூரை, சைடு ஸ்கர்ட்டுகள், பம்பர், சைடு மிரர்கள் சிவப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் ரேஸ் கார்கல் போன்ற பாடி டீகெல்கள், கோடுகள் மூலமாக சிறப்பான தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. ரூஃப் ஸ்பாய்லரும் கொடுக்கப்பட்டிருக்கிறது. தனித்துவத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த மாடல் சிறப்பானதாக இருக்கும்.

இன்டிரியர்

இன்டிரியர்

வெளிப்புறத்தில் மட்டுமின்றி, உட்புறத்திலும் கருப்பு- சிவப்பு என இரட்டை வண்ண அலங்காரத்தில் அசத்துகிறது. ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் நாப்களுக்கு கவர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. புளுடூத் வசதியுடன் கூடிய மியூசிக் சிஸ்டம், புதிய மிதியடிகள், ரியர் வியூ கேமரா வசதியுடன் கூடிய பார்க்கிங் அசிஸ்ட் வசதியும் இருக்கும்.

 வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

எஞ்சின் ஆப்ஷன்களில் மாற்றம் இருக்காது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் சாதாரண விஎக்ஸ்ஐ மற்றும் விடிஐ வேரியண்ட்டுகளின் அடிப்படையிலான மாடலாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் சக்கரங்களுக்கு பிரேக் பவரை சரியான விகிதத்தில் செலுத்தும் இபிடி தொழிழ்நுட்பமும், பூட்டுதலில்லா வசதியை வழங்கும் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டமும் இடம்பெற்றிருக்கும். அதேநேரத்தில், ஏர்பேக்குகள் இருக்காது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

மாருதி ஸ்விஃப்ட் காரின் விஎக்ஸ்ஐ பெட்ரோல் வேரியண்ட் ரூ.5,32,305 லட்சத்திலும், விடிஐ டீசல் வேரியண்ட் ரூ.6,22,661 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அடிப்படையிலான க்ளோரி லிமிடேட் எடிசன் மாடல் ரூ.40,000 வரை கூடுதல் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
English summary
Maruti Swift Glory edition will be launched in India on 6 October 2015. This popular hatchback from Maruti will receive only cosmetic updates
Story first published: Monday, October 5, 2015, 12:09 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark