மாருதி பலேனோ காரின் எஞ்சின், மைலேஜ், வசதிகள் விபரம்!

By Saravana

வரும் 26ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் மாருதி பலேனோ காரின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாருதியின் இரண்டாவது பிரிமியம் கார் மாடலாக விற்பனைக்கு வர இருக்கும் மாருதி பலேனோ கார் வாடிக்கையாளர்களிடத்தும் ஆவலை தூண்டியிருக்கிறது. இந்த கார் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களின் தொகுப்பை ஸ்லைடுகளில் காணலாம்.

சர்வதேச மாடல்

சர்வதேச மாடல்

இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் கார் சர்வதேச அளவில் 100 நாடுகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.. அத்துடன், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு, பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நெக்ஸாவில் மட்டுமே...

நெக்ஸாவில் மட்டுமே...

மாருதி நிறுவனத்தின் நெக்ஸா பிரிமியம் ஷோரூம்கள் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்படும். ஆனால், எந்தவொரு மாருதி டீலர்களிடத்திலும் முன்பதிவு செய்து கொண்டால், அருகிலுள்ள நெக்ஸா ஷோரூமுக்கு அந்த முன்பதிவு பரிமாற்றப்படும்.

பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

மாருதி பலேனோ கார் இலகு எடையும், அதிக உறுதியும் கொண்ட உலோக பாகங்கள் கொண்ட கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், ஸ்விஃப்ட் காரை விட எடை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

விசேஷ கண்ணாடிகள்

விசேஷ கண்ணாடிகள்

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் விசேஷ பூச்சு கொண்ட கண்ணாடிகள் 85 சதவீதம் அளவுக்கு புற ஊதாக் கதிர்களை காருக்குள் பரவவிடாமல் தடுக்கும் அம்சம் கொண்டது.

ஆப்பிள் கார் ப்ளே சிஸ்டம்

ஆப்பிள் கார் ப்ளே சிஸ்டம்

முதல்முறையாக, ஐ-போனை இணைத்துக் கொள்ளும் வசதியுடன் கூடிய ஆப்பிள் கார் பிளே சிஸ்டம் மாருதி பலேனோ காரில் அறிமுகம் செய்யப்படுகிறது.

முக்கிய சிறப்பம்சங்கள்

முக்கிய சிறப்பம்சங்கள்

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், 16 இன்ச் அலாய் வீல்கள், ரூஃப் ஸ்பாய்லர், 4.2 இன்ச் அளவுடைய மல்டி இன்ஃபர்மேஷன் திரை, சாட்டிலைட் நேவிகேஷன், கீ லெஸ் என்ட்ரி வசதியுடன் புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா ஆகியவை முக்கிய வசதிகளாக குறிப்பிடலாம்.

எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

மாருதி பெலேனோ காரில் 84 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.2 லிட்டர் விவிடி பெட்ரோல் எஞ்சினும், 74 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கும்.

கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்

கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்

பெட்ரோல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும், டீசல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாகவும் கிடைக்கும். சிவிடி கியர்பாக்ஸுடன் அறிமுகம் செய்யப்படும் முதல் மாருதி கார் பலேனோ என்பது குறிப்பிடத்தக்கது.

மைலேஜ்

மைலேஜ்

மாருதி பலேனோ பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 21.4 கிமீ மைலேஜ் தரும் என்று அராய் சான்றளித்துள்ளது. டீசல் மாடல் லிட்டருக்கு 27.39 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

பேஸ் வேரியண்ட் உள்பட அனைத்து வேரியண்ட்டுகளிலும் எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் தொழில்நுட்பம் கொண்ட ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், 2 ஏர்பேக்குகள் நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இடம்பெற்றிருக்கிறது.

முன்பதிவு

முன்பதிவு

ரூ.11,000 முன்பணத்துடன் மாருதி பலேனோ காருக்கு டீலர்களில் முன்பதிவு செய்யப்படுகிறது. வரும் 26ந் தேதி விலை விபரம் வெளியிடப்பட உள்ளது.

Most Read Articles
English summary
Maruti Baleno: Official Details Revealed.
Story first published: Friday, October 16, 2015, 10:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X