மாருதி செலிரியோ டீசல் மாடல் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்

By Saravana

ரூ.4.65 லட்சம் என்ற சவாலான ஆரம்ப விலையில் மாருதி செலிரியோ காரின் டீசல் மாடல் சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பெட்ரோல் மாடலுக்கும், இந்த புதிய டீசல் மாடலுக்கும் தோற்றத்தில் வித்தியாசங்கள் எதுவும் இருக்காது.

ஆனால், மாருதி சுஸுகி நிறுவனம் உருவாக்கிய புத்தம் புதிய டீசல் எஞ்சினுடன் வந்திருப்பதோடு, இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது. 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த காரின் முழுமையான விபரங்கள் ஸ்லைடரில் காத்திருக்கின்றன.

முதலீடு

முதலீடு

ரூ.900 கோடி முதலீட்டில் செலிரியோவில் பொருத்தப்பட்டிருக்கும் டீசல் எஞ்சினை மாருதி சுஸுகி நிறுவனம் உருவாக்கியுள்ளது.

டீசல் எஞ்சின்

டீசல் எஞ்சின்

மாருதி சுஸுகி நிறுவனம் உருவாக்கியிருக்கம் 2 சிலிண்டர்கள் கொண்ட புதிய 793சிசி டீசல் எஞ்சினுடன் மாருதி செலிரியோ டீசல் மாடல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. டர்போ சார்ஜர் கொண்ட இந்த டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 125 என்எம் டார்க்கையும் அளிக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வந்திருக்கிறது. ஏஎம்டி மாடல் யூக செய்திகளுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

இலகு எடை

இலகு எடை

முழுவதும் அலுமினிய பாகங்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய டீசல் எஞ்சின் வெறும் 89 கிலோ எடை கொண்டது. இந்தியாவிலேயே குறைவான எடை கொண்ட கார் டீசல் எஞ்சினாக குறிப்பிடப்படுகிறது. மேலும், ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினைவிட இது ஒரு சிசி.,க்கு அதிக டார்க்கை வெளிப்படுத்தும்.

ஆஹா, ஓஹோ மைலேஜ்

ஆஹா, ஓஹோ மைலேஜ்

லிட்டருக்கு 27.62 கிமீ மைலேஜ் தரும் என்பதால், இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமை மாருதி சுஸுகி செலிரியோ டீசல் மாடலுக்கு கிடைக்கிறது. இதே எஞ்சின் விரைவில் அறிமுகமாக இருக்கும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் மினி டிரக்கிலும் பயன்படுத்தப்பட உள்ளது.

முக்கிய வசதிகள்

முக்கிய வசதிகள்

  • கருப்பு மற்றும் பீஜ் இன்டிரியர்
  • மின்னணு கடிகாரம்
  • முன்புறம், பின்புற பவர் விண்டோஸ் வசதி
  • சென்ட்ரல் லாக்கிங் வசதி
  • புளூடூத் வசதியுடன் ஆடியோ சிஸ்டம்
  • ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள்
  • கீ லெஸ் என்ட்ரி வசதி
  • எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் வியூ கண்ணாடிகள்
  • டில்ட் ஸ்டீயரிங் வசதி
  • டிரைவர் இருக்கையின் உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதி
  • பாதுகாப்பு வசதிகள்

    பாதுகாப்பு வசதிகள்

    • ஓட்டுனர் மற்றும் முன்புற பயணிக்கான ஏர்பேக்குகள்
    • இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்
    • அலாய் வீல்கள்
    • ரியர் வைப்பர் மற்றும் டீஃபாகர்
    • விபத்தின் போது தானாக கதவுகள் திறக்கும் வசதி
    • வண்ணங்கள்

      வண்ணங்கள்

      சன்ஷைன் கிரே, பிளேஸிங் ரெட், செருலியன் புளூ, பியர்ல் ஆர்டிக் ஒயிட், சில்க்கி சில்வர் மற்றும் கிளிஸ்டெனிக் கிரே ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

      வேரியண்ட்டுகள் மற்றும் விலை விபரம்

      வேரியண்ட்டுகள் மற்றும் விலை விபரம்

      செலிரியோ டீசல் விலை விபரம்

      • எல்டிஐ: ரூ.4.65 லட்சம்
      • விடிஐ: ரூ.4.95 லட்சம்
      • இசட்டிஐ: ரூ.5.25 லட்சம்
      • இசட்டிஐ ஆப்ஷனல்: ரூ.5.71 லட்சம்
Most Read Articles
English summary
India's largest carmaker, Maruti Suzuki has launched the Celerio Diesel in India. The car boasts the most fuel efficient diesel engine in the country.
Story first published: Wednesday, June 3, 2015, 14:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X