கூடுதல் வசதிகளுடன் மாருதி செலிரியோ ஏஎம்டி மாடல் அறிமுகம்!!

Written By:

கூடுதல் வசதிகளுடன் மாருதி செலிரியோ ஏஎம்டி மாடலின் புதிய டாப் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

இதுவரை மாருதி செலிரியோ காரின் ஆட்டோ கியர் ஷிஃப்ட் கொண்ட மாடல் எல்எக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ மாடல்களில் மட்டுமே கிடைத்து வந்தது. இந்த நிலையில், அதிக வசதிகள் கொண்ட இசட்எக்ஸ்ஐ மாடல் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

கூடுதல் வசதிகள்

கூடுதல் வசதிகள்

மாருதி செலிரியோ ஏஎம்டி மாடலின் புதிய இசட்எக்ஸ்ஐ டாப் வேரியண்ட்டில் கார் வண்ணத்திலான கைப்பிடிகள் மற்றும் பின்புறத்தை காட்டும் கண்ணாடிகள், பனி விளக்குகள், இருக்கை பட்டை அணிவதை எச்சரிக்கும் விளக்கு, ரிமோட் லாக், யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ்- இன் போர்ட் வசதி கொண்ட 2 டின் மியூசிக் சிஸ்டம், ஓட்டுனர் பக்கத்துக்கான ஏர்பேக், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் போன்ற கூடுதல் வசதிகள் இடம்பெற்றுள்ளன.

விலை விபரம்

விலை விபரம்

மாருதி செலிரியோ ஏஎம்டி மாடலின் இசட்எக்ஸ்ஐ டாப் வேரியண்ட் ரூ.4.99 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

டெலிவிரி

டெலிவிரி

இன்னும் 10 நாட்களில் கூடுதல் வசதிகள் கொண்ட இந்த புதிய செலிரியோ மாடல் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கும்.

எஞ்சின்

எஞ்சின்

மாருதி செலிரியோ ஏஎம்டி மாடலில் 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது.

 மைலேஜ்

மைலேஜ்

ஆட்டோ கியர் ஷிஃப்ட் கொண்ட இந்த கார் லிட்டருக்கு 23.1 கிமீ மைலேஜை வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

 
English summary
Maruti has silently launched Celerio ZXI AMT variant in India at Rs. 4.99 lakh (ex-showroom, Delhi).
Story first published: Saturday, May 9, 2015, 16:07 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark