விற்பனையில் 50,000ஐ கடந்து மாருதி சியாஸ் அசத்தல்!

By Saravana

மாருதி சியாஸ் காரின் விற்பனை 50,000 என்ற புதிய மைல்கல்லை கடந்திருக்கிறது. உள்நாட்டில் 43,000 கார்களும், வெளிநாடுகளுக்கு 7,000 கார்களும் ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சியாஸ் விற்பனையில் கிடைத்த சில சுவாரஸ்ய புள்ளிவிபரத் தகவல் மற்றும் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

வாடிக்கையாளர் ஆதரவு

வாடிக்கையாளர் ஆதரவு

உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டிருக்கும் 43,000 கார்களில் 65 சதவீத வாடிக்கையாளர்கள் மாருதியின் பழைய வாடிக்கையாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றில் பெரும்பான்மையானோர் ஸ்விஃப்ட், டிசையர் கார்களை வைத்திருந்தவர்கள் இப்போது சியாஸுக்கு மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாவது இடம்

இரண்டாவது இடம்

மிட்சைஸ் செடான் கார் செக்மென்ட்டில் ஹோண்டா சிட்டிக்கு அடுத்து அதிகம் விற்பனையாகும் கார் மாடல் மாருதி சியாஸ்தான்.

டிசைன்

டிசைன்

மாருதி எஸ்எக்ஸ்4 காருக்கு மாற்றாக வந்த புதிய சியாஸ் காரின் டிசைன் வாடிக்கையாளர்கள் எளிதாக ஏற்றுக் கொள்ளுபடி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ரூ.620 கோடி முதலீட்டில் சுஸுகி ஆந்தென்டிக்ஸ் கான்செப்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சியாஸ் காரின் டிசைனும் விற்பனையில் ஏற்றம் பெற உதவுகிறது.

இடவசதி

இடவசதி

போட்டியாளர்களைவிட அதிக இடவசதியை கொண்டிருப்பதும் சியாஸ் காரை வாடிக்கையாளர்களின் மனதை உடனடியாக கவர்ந்துவிடுவதற்கு மற்றொரு காரணம். ஆம், போட்டி மாடல்களைவிட 10 முதல் 15 சதவீதம் கூடுதல் உட்புற இடவசதியை அளிக்கிறது சியாஸ்.

எஞ்சின்

எஞ்சின்

புதிய மாருதி சியாஸ் காரில் 94 பிஎச்பி ஆற்றலை வழங்கும் 1.4 லிட்டர் கே14பி பெட்ரோல் எஞ்சினும், டீசல் மாடலில் 89 பிஎச்பி ஆற்றலை வழங்கும் 1.3லிட்டர் டிடிஐஎஸ் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கிறது. பெட்ரோல் மாடலில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும், டீசல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாகவும் கிடைக்கிறது.

வசதிகள்

வசதிகள்

ரியர் ஏசி வென்ட், புஷ் பட்டன் ஸ்டார்ட், ஸ்மார்ட் கீ, ஆட்டோமேட்டிக் ஏசி, ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள், லெதர் உறை கொண்ட ஸ்டீயரிங் வீல், லெதர் இருக்கைகள், புதிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பெல்ட் லைட் ஆர்னமென்ட், 16 இஞ்ச் அலாய் வீல்கள், வாய்ஸ் கமாண்ட், நேவிகேஷன் சிஸ்டம் உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன.

மைலேஜ்

மைலேஜ்

இந்த காரை வாடிக்கையாளர்கள் விரும்புவதற்கு அதிக மைலேஜும் ஒரு காரணம். இதன் டீசல் மாடல் லிட்டருக்கு 26.2 கிமீ மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.7 கிமீ மைலேஜ் தரும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

இபிடி,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் சிஸ்டம் என நவீன பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன.

விலை

விலை

மாருதி சியாஸ் காரின் பெட்ரோல் மாடல் ரூ.6.99 லட்சம், டீசல் சியாஸ் ரூ.8.04 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கிறது. மாருதி சியாஸ் காரின் புதிய பெட்ரோல் வேரியண்ட் ரூ.9,08,197 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் வேரியண்ட் ரூ.10,37,423 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கடந்த பிப்ரவரியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

பிரிமியம் டீலர்ஷிப்புகள்

பிரிமியம் டீலர்ஷிப்புகள்

தற்போது அனைத்து மாருதி ஷோரூம்களிலும் சியாஸ் கார் விற்பனை செய்யப்பட்டாலும், இனி தனி ஷோரூம்கள் வழியாக இதுபோன்ற பிரிமியம் கார்களை வகை பிரித்து விற்க மாருதி திட்டமிட்டிருக்கிறது. மேலும், சியாஸ் காரைப் பற்றி வாடிக்கையாளர்களுக்கு முழுமையான தகவல்களை அளிக்கும் விதத்தில் 800 பணியாளர்களை நியமிக்கவும் மாருதி திட்டமிட்டிருக்கிறது.

Most Read Articles
English summary
Maruti Ciaz crosses 50,000 sales mark.
Story first published: Saturday, June 20, 2015, 12:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X