மாருதி சியாஸ் டீசல் ஹைபிரிட் மாடல் செப்டம்பர் 1ல் விற்பனைக்கு வருகிறது

Written By:

வரும் 1ந் தேதி மாருதி சியாஸ் டீசல் காரின் ஹைபிரிட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டால், இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையை பெறும்.

தற்போது விற்பனையில் இருக்கும் சியாஸ் டீசல் மாடலுக்கு மாற்றாக இந்த புதிய டீசல் ஹைபிரிட் கார் நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 ஹைபிரிட் மாடல்

ஹைபிரிட் மாடல்

சுஸுகி நிறுவனத்தின் ஸ்மார்ட் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் இந்த புதிய மாருதி சியாஸ் டீசல் ஹைபிரிட் கார் வருகிறது. 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் மற்றும் பேட்டரியில் இயங்கும் கார் மாடலாக அறிமுகமாகிறது. தற்போதைய டீசல் மாடலுக்கு விடை கொடுத்துவிட்டு, டீசல் ஹைபிரிட் மாடலாக வருகிறது.

 மைலேஜ்

மைலேஜ்

இந்த கார் லிட்டருக்கு 28 கிமீ முதல் 30 கிமீ வரை மைலேஜ் தரும் வகையில் இருக்கும். எனவே, இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் மாடல் என்ற பெருமையை பெற இருக்கிறது.

விலை அதிகரிக்கும்

விலை அதிகரிக்கும்

சியாஸ் டீசல் காரில் ஹைபிரிட் சிஸ்டம் பொருத்துவதன் மூலமாக ரூ.25,000 முதல் ரூ.40,000 வரை விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஆனாலும், மைலேஜ் மூலமாக இந்த சரிகட்டும் வாய்ப்பு இருப்பதால், வாடிக்கையாளர் ஆர்வம் காட்டுவர்.

 மானியம்

மானியம்

ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட கார்களின் தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு மானியத்தின் மூலமாக சியாஸ் டீசல் ஹைபிரிட் காரின் ஆன்ரோடு விலையில் ஒரு லட்சம் ரூபாய் வரை சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, மிக சவாலான விலையில் மாருதி சியாஸ் டீசல் ஹைபிரிட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 போட்டி

போட்டி

மாருதி சியாஸ் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் மிட்சைஸ் செடான் கார் செக்மென்ட்டில் ஹோண்டா சிட்டி கார்தான் விற்பனையில் முன்னிலையில் இருக்கிறது. ஹோண்டா சிட்டி விற்பனையை உடைக்கும் நோக்கில், இந்த புதிய மாடலை மிகுந்த நம்பிக்கையுடன் மாருதி களமிறக்க உள்ளது.

 
English summary
Maruti Suzuki has announced the launch of Ciaz diesel hybrid car on September 1.
Story first published: Friday, August 28, 2015, 10:31 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark