மாருதி சியாஸ் ஆர்எஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

Written By:

பண்டிகை கால வாடிக்கையாளர்களுக்கு நிறைவை கொடுக்கும் விதத்தில், கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட மாருதி சியாஸ் கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

மாருதி சியாஸ் ஆர்எஸ் என்ற புதிய மாடலில் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் சில சிறிய டிசைன் மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் இந்த புதிய வேரியண்ட் சியாஸ் ஆர்எஸ் மாடல் கிடைக்கும்.

டிசைன் மாற்றங்கள்

டிசைன் மாற்றங்கள்

காரின் ஏரோடைனமிக்ஸை மேம்படுத்தும் விதத்தில், முன்புற மற்றும் பின்புறங்களில் பம்பர் ஸ்பாய்லர் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும், பூட் லிட் ஸ்பாய்லரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இவை மாருதி சியாஸ் காரின் தோற்றத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

மாருதி சியாஸ் ஆர்எஸ் வேரியண்ட்டின் இன்டிரியரிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இரட்டை வண்ண இன்டிரியருக்கு பதிலாக முழுவதும் கருப்பு வண்ண இன்டிரியர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இன்ஸ்ட்ரூமென்ட் டயல்களை சுற்றி க்ரோம் வளையம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 வசதிகள்

வசதிகள்

மாருதி சியாஸ் காரின் டாப் வேரியண்ட்டான ZXI+ டாப் வேரியண்ட்டில், கூடுதல் அம்சங்களை சேர்த்து இந்த மாடல் வந்திருக்கிறது. எனவே, புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், அலாய் வீல்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி, ரியர் ஏசி வென்ட், டியூவல் ஏர்பேக்ஸ் என பல்வேறு வசதிகள் உள்ளன.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இல்லை. தற்போதைய 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் ஸ்மார்ட் ஹைபிரிட் டீசல் எஞ்சின் மாடல்களில் புதிய சியாஸ் வேரியண்ட் கிடைக்கும்.

வண்ணங்கள்

வண்ணங்கள்

பியர்ல் ஸ்நோ ஒயிட், மெட்டாலிக் சில்க்கி சில்வர், பியர்ல் மிட்நைட் பிளாக், பியர்ல் மெட்டாலிக் டிக்னிட்டி பிரவுன், மெட்டாலிக் கிளிஸ்டனிங் க்ரே, மெட்டாலிக் கிளியர் பீஜ் மற்றும் பீல் சங்கிரியா ரெட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

விலை விபரம்

விலை விபரம்

மாருதி சியாஸ் ஆர்எஸ் பெட்ரோல் மாடல் ரூ.9.20 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், சியாஸ் ஆர்எஸ் டீசல் மாடல் ரூ.10.28 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

 
English summary
Maruti Suzuki has launched the Ciaz RS - a new variant of the mid-size sedan - at 9.20 lakh (ex-showroom, Delhi).
Story first published: Monday, October 19, 2015, 18:58 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos