புதிய மாருதி செலிரியோ டீசல் காருக்கு முன்பதிவு துவங்கியது!

Written By:

நாளை மறுதினம் மாருதி செலிரியோ காரின் டீசல் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், அந்த காருக்கான முன்பதிவும், டெஸ்ட் டிரைவும் பல மாருதி டீலர்களில் துவங்கப்பட்டுள்ளது.

இந்த காருக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் உடனடியாக, அருகிலுள்ள மாருதி டீலர்களில் காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க முடியும் என்பதுடன், விருப்பமுள்ளவர்கள் முன்பதிவும் செய்து கொள்ளலாம்.

Maruti Celerio
 

மாருதி சுஸுகி நிறுவனம் தயாரித்திருக்கும் புதிய 800சிசி டீசல் எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கும் முதல் மாருதி கார் என்பதால், பெரும் எதிர்பார்ப்பை இந்த செலிரியோ டீசல் மாடல் ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், செலிரியோ டீசல் மாடல் லிட்டருக்கு 27.62 கிமீ மைலேஜை தரும் என்று அராய் சான்றளித்துள்ளது. இதனால், விற்பனைக்கு அறிமுகம் செய்யும்போது இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமை மாருதி செலிரியோ டீசல் மாடலுக்கு கிடைக்கும்.

மாருதி செலிரியோ பற்றிய கூடுதல் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்க!

English summary
Maruti dealers Starts pre booking for celerio diesel.
Story first published: Monday, June 1, 2015, 15:50 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark