மாருதி எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வந்தது - விபரம்!

Written By:

ரூ.5.99 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் மாருதி எர்டிகா காரின் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

தோற்றத்திலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்டிருக்கும் புதிய எர்டிகா மைலேஜிலும் சிறப்பான எம்பிவி கார் மாடலாக வாடிக்கையாளர்களை கவரும். டீசல் மாடல் ஸ்மார்ட் ஹைபிரிட் சிஸ்டத்துடன் வந்துள்ளது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 டிசைன் அம்சங்கள்

டிசைன் அம்சங்கள்

முப்பட்டை க்ரோம் க்ரில், புதிய பம்பர், க்ரோம் அலங்காரத்துடன் கூடிய பனி விளக்கு அறை ஆகியவை முக்கிய மாற்றங்கள். புதிய அலாய் வீல்கல், ஆட்டோமேட்டிக் மற்றும் ஸ்மார்ட் ஹைபிரிட் சிஸ்டத்திற்கான பேட்ஜ்கள் உள்ளிட்டவையும் குறிப்பிட்டு சொல்லலாம்.

இன்டிரியர்

இன்டிரியர்

புளூடூத் இணைப்பு வசதியுடன் கூடிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட சைடு மிரர்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் கீ, 50:50 விகிதத்தில் மடக்கக்கூடிய மூன்றாவது வரிசைக்கான ஸ்பிளிட் இருக்கைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பெட்ரோல் எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் விபரம்

பெட்ரோல் எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் விபரம்

மாருதி எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. அதேநேரத்தில், அதிக மைலேஜ் தரும் விதத்தில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடலில் 94 பிஎச்பி பவரையும், 130 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.4 லிட்டர் எஞ்சின் உள்ளது. பெட்ரோல் மாடல் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் அல்லது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும்.

டீசல் எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் விபரம்

டீசல் எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் விபரம்

டீசல் மாடலில் 90 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.3 லிட்டர் எஞ்சின் உள்ளது. டீசல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலில் கிடைக்கும். மேலும், சியாஸ் காரை போன்று எர்டிகாவிலும் தற்போது ஸ்மார்ட் ஹைபிரிட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக, மைலேஜ் சிறப்பாக மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

மைலேஜ் விபரம்

மைலேஜ் விபரம்

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17.5 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 24.52 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோல் மாடலின் மைலேஜ் 9 சதவீதம் வரையிலும், டீசல் மாடலின் மைலேஜ் 18 சதவீதம் வரையிலும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

 பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

அடிப்படை மாடல்களில் ஓட்டுனர் பக்கத்திற்கான ஏர்பேக் கொடுக்கப்பட்டிருக்கிறது. உயர்வகை மாடல்களில் சக்கரங்களுக்கு பவரை சரியான விகிதத்தில் செலுத்தக்கூடிய இபிடி., நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சீட் பெல்ட் ப்ரீ டென்ஷனர் ஆகியவை இடம்பெற்றிருக்கிறது. இவை பேஸ் மாடல்களில் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது. அதேபோன்று, ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் கேமராவும் பேஸ் மாடல்களுக்கு ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது.

விலை வித்தியாசம்

விலை வித்தியாசம்

விற்பனையில் இருந்த முந்தைய எர்டிகாவைவிட சிறிது கூடுதலான விலையில் வந்திருக்கிறது. அதேநேரத்தில், ஸ்மார்ட் ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட டீசல் மாடலின் விடிஐ மற்றும் இசட்டிஐ உயர் வேரியண்ட்டுகள் முறையே ரூ.13,000 மற்றும் ரூ.3,000 குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் வேரியண்ட் வாரியான விலை விபரங்களை காணலாம்.

பெட்ரோல் விலை விபரம்

பெட்ரோல் விலை விபரம்

எர்டிகா Lxi- Rs 5.99 லட்சம்

எர்டிகா LXi (o)- Rs 6.35 லட்சம்

எர்டிகா VXi- Rs 7.26 லட்சம்

எர்டிகா ZXi- Rs 7.85 லட்சம்

எர்டிகா ZXi+- Rs 8.42 லட்சம்

டீசல் மாடல் விலை விபரம்

டீசல் மாடல் விலை விபரம்

எர்டிகா LDi- Rs 7.55 லட்சம்

எர்டிகா LDi (o)- Rs 7.62 லட்சம்

எர்டிகா VDi- Rs 8.26 லட்சம்

எர்டிகா ZDi- Rs 8.82 லட்சம்

எர்டிகா ZDi+- Rs 9.25 லட்சம்

அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலைகளை அடிப்படையாகக் கொண்டது.

 
English summary
Country's largest car maker Maruti has launched the facelifted Ertiga with prices starting at Rs 5.99 lakh lakh (ex-showroom, Delhi).
Story first published: Saturday, October 17, 2015, 9:49 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark