ஹோண்டா சிட்டியை வீழ்த்த லிட்டருக்கு 30 கிமீ மைலேஜ் தரும் சியாஸ் கார்!

Written By:

நடுத்தர வகை செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி நம்பர்-1 ஆக இருந்து வருகிறது. இந்தநிலையில், சிறிய கார் மார்க்கெட்டில் விற்பனையில் முதலிடத்தில் இருந்து பழக்கப்பட்டு போன மாருதிக்கு மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் எப்படியாவது அந்த நம்பர்- 1 இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதில் கங்கணம் கட்டி செயல்பட்டு வருகிறது.

அதற்கு தக்கவாறு, சியாஸ் காரின் விற்பனையும் ஓரளவு நன்றாகவே இருந்து வருகிறது. இதுவரை 50,000 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால், வலுவான நிலையில் உள்ள ஹோண்டா சிட்டியின் முதலிடத்தை பிடித்துவிடுவதற்கு ஒரே வழி தனது மைலேஜ் என்ற தாரக மந்திரம்தான் என்று மாருதி நம்புகிறது. அதன்படி, சியாஸ் காரில் ஹைபிரிட் ஆப்ஷனுடன் அறிமுகம் செய்வதற்கு மாருதி திட்டமிட்டிருக்கிறது.

கசிந்த தகவல்...

கசிந்த தகவல்...

மாருதி கார் நிறுவனத்தின் அசைவுகளை பின்தொடர்ந்து வெளியிட்டு வரும் காடிவாடி இணையதளம்தான் இந்தமுறையும் ஹைபிரிட் சியாஸ் கார் வருவது பற்றிய தகவலை வெளியிட்டிருக்கிறது. ஹைபிரிட் சியாஸ் காரின் சிறப்புகளை விளக்கும் வாடிக்கையாளர் கையேடுகளை தற்போது அந்த இணையதளம் படம் பிடித்து கசிய விட்டிருக்கிறது.

 ஸ்மார்ட் ஹைபிரிட் சிஸ்டம்

ஸ்மார்ட் ஹைபிரிட் சிஸ்டம்

மாருதி சியாஸ் காரில் விரயமாகும் பிரேக் ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றி பேட்டரியில் சேமிக்கும் புதிய தொழில்நுட்பம் சேர்க்கப்பட இருக்கிறது. மேலும், சிக்னல்களில் சில நொடிகளுக்கு மேல் நிற்கும்போது கார் எஞ்சின் தானாக அணைந்துவிடும் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டமும் கொடுக்கப்பட உள்ளது. மீண்டு ஆக்சிலரேட்டர் அல்லது க்ளட்ச்சை மிதித்தால் எஞ்சின் உயிர் பெற்றுவிடும். இந்த புதிய தொழில்நுட்பங்கள் மூலமாக மாருதி சியாஸ் காரின் மைலேஜ் அதிகரிக்கும்.

 மைலேஜ் விபரம்

மைலேஜ் விபரம்

தற்போது மாருதி சியாஸ் காரின் விற்பனையில் முக்கிய பங்களித்து வரும் டீசல் மாடல் லிட்டருக்கு 26.3 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்றளித்துள்ளது. ஆனால், ஸ்மார்ட் ஹைபிரிட் சிஸ்டம் சேர்க்கப்படும்போது, மாருதி சியாஸ் காரின் மைலேஜ் லிட்டருக்கு 30 கிமீ என்ற அளவை தொடும்.

 விற்பனை அதிகரிக்கும்...

விற்பனை அதிகரிக்கும்...

ஹைபிரிட் சிஸ்டத்துடன் வரும்போது மாருதி சியாஸ் கார்தான் இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையை பெறும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், விற்பனையும் வெகுவாக அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. டீசல் மாடலில் மட்டுமே இந்த ஹைபிரிட் சிஸ்டம் சேர்க்கப்படும். அதாவது, தற்போது பயன்படுத்தப்படும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின்தான் தொடரும். இந்த மாத இறுதியில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

 கூடுதல் பாதுகாப்பு

கூடுதல் பாதுகாப்பு

ஹைபிரிட் சிஸ்டம் சேர்க்கப்படுவது மட்டுமின்றி, மாருதி சியாஸ் காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஓட்டுனர் பக்கத்திற்கான ஏர்பேக் நிரந்தரமான பாதுகாப்பு அம்சமாக இடம்பெறும் என்று அந்த கையேடு மூலமாக தெரிகிறது.

 
English summary
Japanese automobile manufacturer is now planning on introducing a Smart Hybrid engine option to Ciaz. It is most likely to be introduced in Indian market by August-end, 2015. This system will switch off the engine whenever, Ciaz comes to a halt. Maruti Suzuki promises that its Smart Hybrid engine will provide better fuel efficiency than regular models.
Story first published: Monday, August 10, 2015, 16:10 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark