மாருதி சியாஸ் ஹைபிரிட் மாடல் விற்பனைக்கு வந்தது - விலை, மைலேஜ் விபரம்!

Written By:

ரூ.8.23 லட்சம் ஆரம்ப விலையில், மாருதி சியாஸ் டீசல் காரின் ஹைபிரிட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய கார் இதுவரையில் விற்பனையில் இருந்த மாருதி சியாஸ் காரின் டீசல் மாடலுக்கு மாற்றாக விற்பனைக்கு வந்துள்ளது.

வசதிகளுக்கு தக்கவாறு 5 விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இந்த காரின் மைலேஜ், வேரியண்ட் வாரியாக விலை விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 இறக்குமதி ஹைபிரிட் சிஸ்டம்

இறக்குமதி ஹைபிரிட் சிஸ்டம்

மாருதி சியாஸ் காருக்கான ஹைபிரிட் சிஸ்டம் இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும், சியாஸ் காரைத் தொடர்ந்து மாருதி எர்டிகா, ஸ்விஃப்ட், டிசையர் கார்களிலும் இந்த ஹைபிரிட் சிஸ்டம் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வர இருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

ஏற்கனவே இருந்த அதே 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின்தான் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சினுடன் கூடுதல் மைலேஜ் தரும் வகையில், எஞ்சின் ஸ்டார்ட்/ ஸ்டாப் சிஸ்டம் மற்றும் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டரும் உள்ளது.

 மைலேஜ் விபரம்

மைலேஜ் விபரம்

மாருதி சியாஸ் காரின் பழைய டீசல் மாடல் லிட்டருக்கு 26.21 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஹைபிரிட் சிஸ்டத்துடன் வந்திருக்கும் புதிய டீசல் மாடல் லிட்டருக்கு 28.09 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையையும் இந்த கார் பெற்றிருக்கிறது.

 வசதிகள் விபரம்

வசதிகள் விபரம்

ஹைபிரிட் சிஸ்டம் தவிர்த்து, சியாஸ் காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் இப்போது ஓட்டுனர் பக்கத்திற்கான ஏர்பேக் நிரந்தர பாதுகாப்பு ஆக்சஸெரீயாக வழங்கப்படுகிறது. மேலும், வி ஆப்ஷனல், விஎக்ஸ்ஐ மற்றும் விடிஐ ஆகிய நடுத்தர வேரியண்ட்டுகளிலிருந்து டியூவல் ஏர்பேக்ஸ் நிரந்தர ஆக்சஸெரீயாக இடம்பெற்றிருக்கிறது. டாப் வேரியண்ட்டுகளில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் நுட்பம் ஆகியவை இடம்பெற்றிருக்கிறது.

சியாஸ் டீசல் ஹைபிரிட் மாடலின் விலை விபரம்

சியாஸ் டீசல் ஹைபிரிட் மாடலின் விலை விபரம்

சியாஸ் SHVS விடிஐ: ரூ.8.23 லட்சம்

சியாஸ் SHVS விடிஐ[ஓ]: ரூ.8.37 லட்சம்

சியாஸ் SHVS விடிஐ ப்ளஸ்: ரூ.8.81 லட்சம்

சியாஸ் SHVS இசட்டிஐ: ரூ.9.52 லட்சம்

சியாஸ் SHVS இசட்டிஐ ப்ளஸ்: ரூ.10.17 லட்சம்

[அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலைகள்]

 
English summary
Maruti Suzuki Ciaz hydrid launced in India, priced at INR 8.23 lakhs (Ex-showroom Delhi). New Maruti Suzuki Ciaz Hybrid comes in 5 different variant.
Story first published: Tuesday, September 1, 2015, 13:51 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark