கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் மாருதி சியாஸ் கார் அறிமுகம்!

Written By:

கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் மாருதி சியாஸ் காரின் பேஸ் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மாருதி சியாஸ் காரின் விஎக்ஸ்ஐ மற்றும் விடிஐ வேரியண்ட்டுகளில் ஆகிய வேரியண்ட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு வசதி கொண்ட ஆப்ஷனல் வேரியண்ட்டுகளாக இவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

Maruti Ciaz
 

இந்த புதிய விஎக்ஸ்ஐ ஆப்ஷனல் மற்றும் விடிஐ ஆப்ஷனல் வேரியண்ட்டுகளில் டியூவல் ஏர்பேக்ஸ் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன், விபத்துக்களின்போது தானாகவே இறுகிக் கொள்ளும் சீட் பெல்ட்டுகள், ஓட்டுனர் சீட் பெல்ட் அணிவதை ஒலி வடிவிலான எச்சரிக்கை வசதி போன்றவை இந்த ஆப்ஷனல் வேரியண்ட்டுகளில் இருக்கும்.

மாருதி சியாஸ் எல்எக்ஸ்ஐ ஆப்ஷனல் வேரியண்ட் ரூ.7.48 லட்சம் விலையிலும், விடிஐ ஆப்ஷனல் வேரியண்ட் ரூ.8.37 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். சாதாரண விஎக்ஸ்ஐ வேரியண்ட் ரூ.7.31 லட்சம் விலையிலும், விடிஐ வேரியண்ட் ரூ.8.23 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

English summary
Maruti Suzuki, one of India's leading carmakers has launched the Maruti Suzuki Ciaz with more safety features. The company now offers safety equipment like dual airbags and ABS in its base variants as well.
Story first published: Monday, September 14, 2015, 15:41 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark