புதிய மாருதி சியாஸ் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம் - விபரம்

Written By:

கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாருதி சியாஸ் காரின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சியாஸ் Z+ என்ற பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த புதிய மாடல் இதுவரையில் விற்பனையில் இருந்த சியாஸ் காரின் Z(O) என்ற வேரியண்ட்டுக்கு மாற்றாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

 

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் டாப் வேரியண்ட்டாக விற்பனை செய்யப்படும். இந்த காரில் கூடுதலாக லெதர் உறை கொண்ட ஸ்டீயரிங் வீல், லெதர் இருக்கைகள், புதிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பெல்ட் லைட் ஆர்னமென்ட், 16 இஞ்ச் அலாய் வீல்கள், வாய்ஸ் கமாண்ட், நேவிகேஷன் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் நிரந்தர அம்சங்களாக இருக்கும்.

மாருதி சியாஸ் காரின் புதிய பெட்ரோல் வேரியண்ட் ரூ.9,08,197 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் வேரியண்ட் ரூ.10,37,423 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

சென்னையில் மாருதி சியாஸ் காரின் ஆன்ரோடு விலை!

English summary
Maruti Suzuki will be offering this new trim level in both petrol and diesel models. Currently their top of the line offering was the Z(O), which will be replaced by the Ciaz Z+ trim level. This new trim level will be their most feature rich offering and will provide more value to the buck.
Story first published: Thursday, February 5, 2015, 9:51 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark