விரைவில் புதுப்பொலிவுடன் வரும் மாருதி ஈக்கோ கார்!

Posted By:

மிக குறைவான விலை கொண்ட எம்பிவி மாடல் மாருதி ஈக்கோ. பல ஆண்டுகளாக பட்ஜெட் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தி வரும் மாருதி ஈக்கோ விரைவில் புது்பபொலிவுடன் வர இருக்கிறது.

டட்சன் கோ ப்ளஸ் மினி எம்பிவி கார் வரவையடுத்து, ஈக்கோ காருக்கு புதுப்பொலிவு கொடுத்து களமிறக்க மாருதி முடிவு செய்துள்ளது. புதுப்பொலிவுடன் வரும் ஈக்கோ கார் வெளித்தோற்றத்திலும், உள்புறத்திலும் பல்வேறு டிசைன் மாற்றங்களை பெற்றிருக்கும்.

Maruti Eeco
 

பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என்ற குறைபாட்டை களையும் விதமாக, கூடுதல் பாதுகாப்பு அம்சங்களையும், நவீன தொழில்நுட்ப வசதிகளையும் ஈக்கோ காரில் சேர்க்க மாருதி முடிவு செய்துள்ளது.

எஞ்சினில் மாற்றங்கள் இருக்காது என்றே தெரிகிறது. தற்போது பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலிலும், சிஎன்ஜி மாடலிலும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும். இந்த ஆண்டில் பிற்பாதியில் புதுப்பொலிவு பெற்ற ஈக்கோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.

மயிலாடுதுறையில் மாருதி ஈக்கோ ஆன்ரோடு விலை!

English summary
The refreshed Eeco will not be launched anytime soon and expect it by end of 2015. We believe Maruti Suzuki could charge a bit more for the 2015 Eeco, the price will be justified with added features and better vehicle design. The MPV is a basic model and offers value for money to it customers.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark