மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது - முழு விபரம்

Posted By:

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவி டெல்லியில் நடந்த விழாவில் சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது பிரமியம் க்ராஸ்ஓவர் மாடலாக நிலைநிறுத்தப்படுகிறது.

புதிய மாருதி எஸ் க்ராஸ் கார் இரண்டு விதமான டீசல் மாடலில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். பெட்ரோல் மாடல் இல்லை. வசதிகளை் மற்றும் எஞ்சின் ஆப்ஷனை பொறுத்து 7 வேரியண்ட்டுகளில் தேர்வு செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 நெக்ஸா ஷோரூம்கள்...

நெக்ஸா ஷோரூம்கள்...

புதிய மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நெக்ஸா ஷோரூம்கள் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்படும்.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

இரண்டு விதமான டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். 1.3 லிட்டர் டிடிஐஎஸ் 200 டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 89 எச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. மற்றொன்று 1.6 லிட்டர் டிடிஐஎஸ் 320 டீசல் எஞ்சின் கொண்டது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 118 எச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வழங்கும்.

 மைலேஜ்

மைலேஜ்

மாருதி எஸ் க்ராஸ் காரின் 1.3 லிட்டர் டீசல் மாடல் லிட்டருக்கு 23.65 கிமீ மைலேஜையும், 1.6 லிட்டர் டீசல் மாடல் லிட்டருக்கு 22.07 கிமீ மைலேஜையும் தரும்.

முக்கிய வசதிகள்

முக்கிய வசதிகள்

க்ரூஸ் கன்ட்ரோல், ரெயின் சென்சிங் வைப்பர்கள், ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயெின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, புஷ் பட்டன் ஸ்டார்ட் போன்றவை முக்கிய வசதிகளாக இருக்கின்றன.

1.3 லிட்டர் டீசல் மாடல் விலை விபரம்

1.3 லிட்டர் டீசல் மாடல் விலை விபரம்

ஸிக்மா: ரூ.8.34 லட்சம்

டெல்ட்டா: ரூ.9.15 லட்சம்

ஸீட்டா: ரூ.9.99 லட்சம்

ஆல்ஃபா: ரூ.10.75 லட்சம்

 1.6 லிட்டர் டீசல் மாடல் விலை விபரம்

1.6 லிட்டர் டீசல் மாடல் விலை விபரம்

டெல்ட்டா: ரூ.11.99 லட்சம்

ஸீட்டா: ரூ.12.99 லட்சம்

ஆல்ஃபா: ரூ.13.74 லட்சம்

அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலைகள்

 
English summary
The Maruti Suzuki S-Cross has been launched in India. This is a very important launch for the company since it will compete against few of the best sellers like the Ford ecosport and the Renault Duster.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark