விரைவில் வருகிறது மாருதி டிசையர் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் - ஸ்பை படங்கள்!

By Saravana

மாருதி டிசையர் காரின் ஏஎம்டி மாடல் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. டீலர் யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாருதி டிசையர் காரின் ஏஎம்டி மாடலின் படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

டெஸ்ட் டிரைவ் பயன்பாட்டுக்கான அந்த மாடலின் படங்கள் காடி வாடி இணையதளம் வெளியிட்டிருக்கிறது. கூடுதல் தகவல்கள், ஸ்பை படங்களை ஸ்லைடரில் காணலாம்.

வரிசை கட்டும் மாருதி

வரிசை கட்டும் மாருதி

மாருதி ஆல்ட்டோ கே10, செலிரியோ மற்றும் வேகன் ஆர் கார்களை தொடர்ந்து, தற்போது மாருதி டிசையர் காரிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் அறிமுகம் செய்யபப்பட உள்ளது.

சப்ளையர்

சப்ளையர்

இத்தாலியை சேர்ந்த மேக்னெட்டி மரெல்லி நிறுவனத்தின் ஏஎம்டி கியர்பாக்ஸ்தான் மாருதி டிசையர் காரிலும் பயன்படுத்தப்பட உள்ளது.

 அறிமுகம்

அறிமுகம்

அடுத்த மாதம் இந்த புதிய ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாருதி டிசையர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில் டெலிவிரி துவங்கப்படும்.

 கூடுதல் விலை

கூடுதல் விலை

சாதாரண மாடல்களைவிட ரூ.50,000 கூடுதல் விலையில் இந்த புதிய ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாருதி டிசையர் எதிர்பார்க்கப்படுகிறது.

மைலேஜ்

மைலேஜ்

மாருதி டிசையர் ஏஎம்டி டீசல் மாடல் லிட்டருக்கு 26 கிமீ வரை மைலேஜ் தரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, டிமான்ட் அதிகரிக்கும் என தெரிகிறது.

 மாற்றங்கள்

மாற்றங்கள்

ஆட்டோ கியர்ஷிஃப்ட் பேட்ஜ் கொடுக்கப்பட்டிருக்கும் என்பதை தவிர்த்து, டிசைன், எஞ்சின், வசதிகளில் மாற்றங்கள் இருக்காது.

பெட்ரோலிலும்...

பெட்ரோலிலும்...

ரகசிய கேமராவில் டீசல் மாடலின் டாப் வேரியண்ட் சிக்கியிருக்கிறது. ஆனால், பெட்ரோல் மாடலிலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Photo Source

Most Read Articles
English summary
A new variant of the Maruti Suzuki Swift Dzire fitted with Maruti's Auto Gear Shift (AMT) gearbox has been spotted in a dealership's yard. The car appears to be a test drive vehicle.
Story first published: Thursday, December 24, 2015, 10:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X