இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் காராக வரும் மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட்- சிறப்புத் தகவல்கள்!

By Saravana

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பற்றி பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டிசைனில் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் எரிபொருள் சிக்கனம் கொண்டதாக புதிய டிசையர் மாடல் வர இருக்கிறது.

இந்த புதிய டிசையர் காரின் டீசல் மாடல் இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையை பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சிறப்புத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


டிசைன் மாற்றங்கள்

டிசைன் மாற்றங்கள்

முன்புறத்தில் க்ரில் அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. ஹோண்டா அமேஸ் போன்று குரோம் பட்டை க்ரில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பேஸ் மாடலில் கருப்பு நிற பட்டையில் சுஸுகி சின்னம் இடம்பெற்றிருக்கிறது. ஸ்மோக்டு ஹெட்லைட்டுகளும் புதிது. பனி விளக்குகள் அறையில் ஒரு குரோம் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. பம்பர் டிசைனும் மாற்றத்தை சந்தித்திருக்கிறது. பின்புறத்தில் பம்பர் டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

 கூடுதல் வசதிகள்

கூடுதல் வசதிகள்

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடலைப் போன்றே இந்த புதிய டிசையர் மாடலிலும் புஷ் பட்டன் ஸ்டார்ட், கீ லெஸ் என்ட்ரி, 6 ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கூடுதல் மைலேஜ்

கூடுதல் மைலேஜ்

முந்தைய டிசையர் மாடலின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 19.01 கிமீ மைலேஜ் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், புதிய டிசையரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.85 கிமீ மைலேஜ் தரும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இதேபோன்று, டீசல் மாடல் லிட்டருக்கு 26.59 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையை டிசையர் ஃபேஸ்லிஃப்ட் பெற இருக்கிறது.

உற்பத்தி

உற்பத்தி

தற்போது விற்பனையில் இருந்த மாடலின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, புதிய டிசையர் காரின் உற்பத்தி முழு வீச்சில் நடந்து வருகிறது. ஏற்கனவே 8,000க்கும் அதிகமான எண்ணிக்கையில் புதிய டிசையர் கார்கள் உற்பத்தி செய்து டீலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்பதிவு

முன்பதிவு

ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை முன்பணம் பெற்றுக்கொண்டு புதிய டிசையர் காருக்கு டீலர்களில் முன்பதிவு செய்யப்படுகிறது. வட இந்திய நகரங்களில் உள்ள சில டீலர்களுக்கு கார் வந்துவிட்டது. ஆனால், தென் இந்தியாவில் உள்ள டீலர்களுக்கு இன்னும் கார் வந்து சேரவில்லை. இன்னும் ஓரிரு தினங்களில் கார் வந்துவிடும் என்று டீலர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய வேரியண்ட்

புதிய வேரியண்ட்

தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி, பெட்ரோல் மாடலில் LXi வேரியண்ட்டில் ஆப்ஷனல் வேரியண்ட் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில், முன்புறத்திற்கான பவர் விண்டோஸ் வசதி இருக்கும். மேலும், புதிய வண்ணங்களிலும் புதிய டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வர இருக்கிறது.

விலை அதிகரிக்கும்

விலை அதிகரிக்கும்

டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை விலை கூடுதலாக இருக்கும் என்று டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் எக்ஸென்ட், டாடா ஸெஸ்ட் கார்களுக்கு சிம்ம சொப்பனமாக மீண்டும் கூடுதல் வசதிகளுடன் புதிய டிசையர் களமிறங்க உள்ளது.

விற்பனைக்கு எப்போது?

விற்பனைக்கு எப்போது?

நாளை மறுதினம் (25ந் தேதி)புதிய டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மார்ச் முதல் வாரத்தில் டெலிவிரி துவங்கும் என்று டீலர் வட்டாரத் தகவல் கூறுகிறது.

குறிப்பு: மாதிரிக்காக தற்போது விற்பனையில் இருக்கும் காரின் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Maruti Suzuki India dealerships have already started accepting bookings for the new 2015 Swift Dzire and deliveries are expected to began from March 1st week. Stay tuned to drivespark.com for latest updates. 
Story first published: Monday, February 23, 2015, 13:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X