மாருதி ஸ்விஃப்ட் ஸ்பெஷல் எடிசன்- கண்டிப்பா பரிந்துரைக்கலாம்!!

Written By:

மாருதி ஸ்விஃப்ட் காரின் பேஸ் மாடலின் அடிப்படையில் புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இது மாருதி ஸ்விஃப்ட் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஓர் அருமையான சாய்ஸாக இருக்கும் என்று கூறலாம்.

ஏனெனில், மாருதி ஸ்விஃப்ட் காரின் மிட் வேரியண்ட் மற்றும் டாப் வேரியண்ட்டில் இருக்கும் சில தேவையான வசதிகளை சேர்த்து, சற்றே கூடுதலான விலையில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஸ்விஃப்ட் மாடலை வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது மிகச்சிறப்பான மாடலாகவே பரிந்துரைக்கலாம். இந்த காரில் இடம்பெற்றிருக்கும் வசதிகளை பார்த்தால், நீங்களும் ஆர்வமாகிவிடுவீர்கள். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பேஸ் மாடல்

பேஸ் மாடல்

மாருதி ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் LXi[O] மற்றும் LDi வேரியண்ட்டுகளின் அடிப்படையிலான கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மாருதி ஸ்விஃப்ட் எஸ்பி என்ற பெயரில் இந்த ஸ்பெஷல் எடிசன் வருகிறது. பண்டிகை கால ஸ்பெஷலாக வரும் இந்த கார் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும்.

வெளிப்புற அம்சங்கள்

வெளிப்புற அம்சங்கள்

வெளிப்புறத்தில் கருப்பு நிற ஏ- பில்லர்கள், பனி விளக்குகள், வீல் கேப், எஸ்பி என்ற ஸபெஷல் எடிசன் பேட்ஜ் ஆகியவை கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கின்றன.

உட்புற அம்சங்கள்

உட்புற அம்சங்கள்

புளுடூத் மற்றும் யுஎஸ்பி இணைப்பு வசதிகள் கொண்ட ஆடியோ சிஸ்டம், 4 ஸ்பீக்கர்கள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், எஸ்பி பேட்ஜ் கொண்ட குஷன்கள், புதிய சீட் கவர்கள், ஸ்டீயரிங் வீல் கவர், 4 கதவுகளுக்கான பவர் விண்டோஸ், கீ லெஸ் என்ட்ரியுடன் கூடிய சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், 60:40 ஸ்பிளிட் இருக்கைகள் போன்றவை இதன் சிறப்பம்சங்கள்.

எஞ்சின்

எஞ்சின்

எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. இந்த காரில் 87 பிஎஸ் பவரை அதிகபட்சமாக வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 75 பிஎஸ் பவரை வழங்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் கிடைக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது.

 விலை

விலை

மாருதி ஸ்விஃப்ட் எஸ்பி ஸ்பெஷல் எடிசன் மாடலின் LXi[O] பெட்ரோல் வேரியண்ட் ரூ.4.78 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், LDi டீசல் வேரியண்ட் ரூ.5.84 லட்சம் விலையிலும் வருகிறது. சாதாரண பேஸ் மாடலின் விலையைவிட ரூ.35,000 மட்டுமே கூடுதல் விலையில் இந்த மாடல்கள் வந்துள்ளன.

பரிந்துரைக்கான மாடல்

பரிந்துரைக்கான மாடல்

மிட் வேரியண்ட் மற்றும் டாப் வேரியண்ட்டில் இருக்கும் தேவையான வசதிகளை மட்டும் எடுத்து இந்த புதிய பேஸ் மாடலை மாருதி அறிமுகம் செய்துள்ளது. இந்த பேக்கேஜ் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரைக்கும் வசதிகளை கொண்டதாக இருக்கிறது. அதேநேரத்தில், போதுமான பாதுகாப்பு வசதிகளை பெற நினைப்பவர்கள் டாப் வேரியண்ட்டிற்கு செல்வதே நல்லது.

 
English summary
According to our source, the petrol Swift SP is priced at Rs 4.78 lakh (ex-Delhi) while the diesel will cost Rs 5.84 lakh (ex-Delhi).
Story first published: Monday, September 7, 2015, 10:37 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark