ஆட்டோ கியர் ஷிஃப்ட் வசதியுடன் மாருதி வேகன் ஆர் விற்பனைக்கு அறிமுகம்!

By Saravana

ஆட்டோமேட்டிக் கியர் ஷிஃப்ட்[ஏஎம்டி கியர்பாக்ஸ்] வசதியுடன் கூடிய மாருதி வேகன் ஆர் மற்றும் ஸ்டிங்ரே கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

பட்ஜெட் விலையில் ஆட்டோமேட்டிக் கியர் ஷிஃப்ட் வசதி கொண்ட மாடல்களை விரும்புவோர்க்கு இந்த புதிய மாடல்கள் மிகச் சிறப்பான தேர்வாக அமையும். மைலேஜ், விலை, வசதிகள் உள்ளிட்ட முக்கிய விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

மாருதி வேகன் ஆர் மற்றும் ஸ்டிங்ரே கார்களின் ஆட்டோ கியர் ஷிஃப்ட் வசதி கொண்ட மாடல் விஎக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ ஆப்ஷனல் என இரு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

 வசதிகள்

வசதிகள்

மாருதி வேகன் ஆர் மற்றும் ஸ்டிங்ரே மாடல்களில் பனி விளக்குகள், கீ லெஸ் என்ட்ரி, டில்ட் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய பவர் ஸ்டீயரிங், பவர் ஸ்டீயரிங் மற்றும் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய சைடு மிரர்கள் ஆகியவை முக்கிய வசதிகளாக இருக்கின்றன. ரியர் வைப்பர் மற்றும் தண்ணீர் தெளித்து துடைக்கும் வாஷரும் உள்ளது. மேனுவல் ஏசி வசதி, மியூசிக் சிஸ்டம் போன்ற வசதிகளும் நிரந்தர வசதியாக இடம்பெற்று இருக்கின்றன. மீட்டர் கன்சோலில் கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. ஆட்டோ கியர் ஷிஃப்ட் மாடலில் 14 இன்ச் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

மாருதி வேகன் ஆர் மற்றும் ஸ்டிங்ரே மாடல்களின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனலாக பெற்றுக் கொள்ளலாம். அதேபோன்று, ஓட்டுனருக்கான ஏர்பேக் மற்றும் சக பயணிக்கான ஏர்பேக்கும் ஆப்ஷனலாக தேர்வு செய்து கொள்ளும் வசதியும் உண்டு.

எஞ்சின்

எஞ்சின்

மாருதி வேகன் ஆர் மற்றும் ஸ்டிங்ரே கார்களின் ஏஎம்டி மாடல்களில் மூன்று சிலிண்டர்கள் கொண்ட 998சிசி பெட்ரோல் எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 68 பிஎஸ் பவரையும், 90 என்எம் டார்க்கையும் வழங்கும்.

மைலேஜ்

மைலேஜ்

மாருதி வேகன் ஆர் மற்றும் ஸ்டிங்ரே கார்களின் ஏஎம்டி எனப்படும் தானியங்கி கியர் மாற்றம் கொண்ட மாடல் லிட்டருக்கு 20.51 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விலை விபரம்

விலை விபரம்

மாருதி வேகன் ஆர் ஏஎம்டி விலை

விஎக்ஸ்ஐ: ரூ.4,76,935

விஎக்ஸ்ஐ ஆப்ஷனல்: ரூ.5,09,609

வேகன் ஆர் ஸ்டிங்ரே ஏஎம்டி விலை

விஎக்ஸ்ஐ: ரூ.4,98,594

விஎக்ஸ்ஐ ஆப்ஷனல்: ரூ.5,31,238

அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம்

ஏஎம்டி கியர்பாக்ஸ் என்றால் என்ன?

ஏஎம்டி கியர்பாக்ஸ் என்றால் என்ன?

ஏஎம்டி கியர்பாக்ஸ் என்பது...

Most Read Articles
English summary
Maruti has launched the auto gear shift variants of WagonR and stigray cars in India.
Story first published: Monday, November 9, 2015, 9:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X