விரைவில் ஏஎம்டி கியர்பாக்ஸுடன் வரும் மாருதி வேகன்- ஆர்!

Posted By:

சிறிய கார் மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலான மாருதி வேகன் ஆரில், ஆட்டோ கியர் ஷிஃப்ட் வசதி கொண்ட மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது மாருதி.

தற்போது மாருதி ஆல்ட்டோ கே10 மற்றும் செலிரியோ கார்கள் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டதாக விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில், மாருதி வேகன் ஆர் காரிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் எனப்படும் ஆட்டோ கியர் ஷிஃப்ட் மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது மாருதி.

டிசைன் மாற்றங்கள்

டிசைன் மாற்றங்கள்

டிசைன் மாற்றங்கள் இருக்காது. பின்புறத்தில் ஆட்டோ கியர் ஷிஃப்ட் பேட்ஜ் மட்டும் இடம்பெற்றிருக்கும். மீட்டர் கன்சோலில் செலிரியோ கார் போன்றே, கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர் இடம்பெறும் என்று தகவல்கள் கூறுகின்றன. மேனுவல் மாடலைவிட சிறிதளவு கூடுதல் விலை கொண்டதாக இருக்கும்.

 சிறந்த சாய்ஸ்

சிறந்த சாய்ஸ்

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்ப்புறத்திற்கும் ஏற்றதாக இருக்கும். அத்துடன், முதல்முறை கார் வாங்குவோர் மற்றும் பெண்களுக்கும் இந்த புதிய மாருதி வேகன் ஆர் காரின் ஆட்டோ கியர் ஷிஃப்ட் கொண்ட மாடல் சிறப்பான தேர்வாக இருக்கும்.

வாடிக்கையாளர்களை கவரும்

வாடிக்கையாளர்களை கவரும்

குறைவான பராமரிப்பு செலவீனம், அதிக மைலேஜ் மற்றும் ஆட்டோ கியர் ஷிஃப்ட் போன்றவை வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும்.

 விற்பனைக்கு எப்போது?

விற்பனைக்கு எப்போது?

தீபாவளிக்கு முன்னதாக, அதாவது, இன்னும் சில நாட்களில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏன், இன்றே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், அறிமுக தேதி குறித்து மாருதியிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் எமக்கு கிட்டவில்லை.

Spy Image Source 

English summary
Maruti-Suzuki will launch the Wagon R/ Stingray with an Automated Manual Transmission (AMT).

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark