மீண்டும் இந்தியாவில் களமிறங்கும் மஸராட்டி!

Written By:

இத்தாலியை சேர்ந்த ஃபியட் கிறைஸ்லர் குழுமத்தின் அங்கமாக ஃபெராரி மற்றும் மஸராட்டி உயர்வகை கார் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவில் ஃபெராரி மற்றும் மஸராட்டி நிறுவனங்கள் ஷ்ரேயான்ஸ் குழுமத்தை அங்கீகரிக்கப்பட்ட வினியோகஸ்தராக நியமித்து கார் விற்பனையில் ஈடுபட்டு வந்தன.

Maserati Car
 

இந்த நிலையில், சர்வீஸ் மற்றும் இதர சேவைகளில் குறைபாடுகள் இருப்பதாக ஷ்ரேயான்ஸ் நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். இதையடுத்து, இரு நிறுவனங்களும் ஷ்ரேயான்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியிருந்த அங்கீகாரத்தை ரத்து செய்தன.

இதனால், இரு நிறுவனங்களின் நேரடி கார் விற்பனை தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஃபெராரி நிறுவனம் அண்மையில் டெல்லி மற்றும் மும்பையில் புதிய டீலர்ஷிப்புகளை நியமித்து மீண்டும் வர்த்தகத்தை தொடங்க இருப்பதாக அறிவித்தது.

இதேபோன்று, மஸராட்டி நிறுவனமும் இந்தியாவில் விரைவில் டீலர்களை நியமித்து வர்த்தகத்தை துவங்க திட்டமிட்டு இருக்கிறது. இதன்மூலம்,ஏற்கனவே மஸராட்டி கார் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு நேரடி சர்வீஸ் சேவையும், கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நேரடி சேவையும் விரைவில் கிடைக்க இருக்கிறது.

English summary
Maserati claims it will be soon and better than before. They have also not confirmed with whom will they partnering to make a comeback in India during 2015.
Story first published: Saturday, January 24, 2015, 10:50 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark