இந்தியாவில் மீண்டும் கால் பதித்த மஸேரட்டி: கார்கள் மற்றும் விலை விபரம்

By Saravana

சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்ற இத்தாலியை சேர்ந்த மஸேரட்டி நிறுவனம் இந்தியாவில் மீண்டும் வர்த்தகத்தை துவங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் அங்கமான மஸேரட்டி நிறுவனம் அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் புதிய டீலர்ஷிப்புகளை திறக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. அத்துடன் கார் மாடல்களின் விபரங்கள் மற்றும் விலை பட்டியலையும் வெளியிட்டு இருக்கிறது.

டீலர்ஷிப்புகள்

டீலர்ஷிப்புகள்

டெல்லி, மும்பை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் புதிய டீலர்ஷிப்புகள் அடுத்த சில மாதங்களில் திறக்கப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டு செடான் மாடல்கள், ஒரு கூபே மற்றும் ஒரு கேப்ரியோலே மாடல்களை விற்பனை செய்ய இருக்கிறது மஸேரட்டி.

மஸேரட்டி கிப்ளி

மஸேரட்டி கிப்ளி

இதில், மஸேரட்டி கிப்ளி செடான் கார் ரூ.1.1 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் வருகிறது. இந்த காரில் 275 பிஎச்பி பவரை அளிக்கும் 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்சின் இருக்கும்.

மஸேரட்டி குவாட்ரோபோர்ட்டே

மஸேரட்டி குவாட்ரோபோர்ட்டே

மஸேரட்டி குவாட்ரோபோர்ட்டே கார் ரூ.1.5 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் வருகிறது. மேலும், மஸேரட்டி குவாட்ரோபோர்ட்டே ஜிடிஎஸ் செடான் கார் ரூ.2.2 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்த காரில் 530 பிஎச்பி ஆற்றலை அளிக்க வல்ல ட்வின் டர்போ வி8 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

மஸேரட்டி கிரான் டூரிஷ்மோ

மஸேரட்டி கிரான் டூரிஷ்மோ

அடுத்ததாக, மஸேரட்டி கிரான்டூரிஷ்மோ கார் ரூ.1.8 கோடி விலையிலும், மஸேரட்டி கிரான் கேப்ரியோ மாடல் ரூ.2 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது.

எஸ்யூவியும் உண்டு

எஸ்யூவியும் உண்டு

இந்தியாவில் லெவான்டே எஸ்யூவியையும் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக மஸேரட்டி தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Italian luxury carmaker Maserati has officially announced a comeback to India. The company will open dealerships in the next few months. Currently, Maserati will open its first dealership in Mumbai, and Delhi and Bangalore will soon have dealerships available too.
Story first published: Thursday, July 16, 2015, 11:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X