மீண்டும் இந்தியாவில் மஸராட்டி... டெல்லியில் முதல் ஷோரூம் திறந்தது!

Posted By:

இந்திய கார் சந்தையில் மீண்டும் களமிறங்கியிருக்கிறது இத்தாலியை சேர்ந்த மஸராட்டி ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனம். இதற்காக, டெல்லியில் தனது முதல் ஷோரூமை சமீபத்தில் திறந்திருக்கிறது.

மதுரா சாலையில் திறக்கப்பட்டிருக்கும் இந்த புதிய ஷோரூமில் கார் விற்பனை, கார் பராமரிப்பு, கஸ்டமைஸ் பணிகள், உதிரிபாகங்கள் விற்பனை என அனைத்து வசதிகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.

Maserati Cars
 

டெல்லி ஷோரூமில் குவாட்ரோபோர்ட்டே, கிப்லி, கேப்ரியோ க்ரான்டூரிஷ்மோ, க்ரான்கேப்ரியோ ஆகிய மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கும். மஸராட்டியின் சர்வதேச விற்பனை விதிகளுக்குட்பட்டு இந்த புதிய ஷோரூமில் கார் விற்பனை செய்யப்படும்.

டெல்லியை தொடர்ந்து, மும்பை மற்றும் பெங்களூரிலும் புதிய கார் ஷோரூமை திறக்க திட்டமிட்டு இருக்கிறது மஸராட்டி கார் நிறுவனம். இத்தாலியை சேர்ந்த ஃபியட் நிறுவனத்தின் அங்கமாக மஸராட்டி கார் பிராண்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மஸராட்டி கார்களின் எக்ஸ்ஷோரூம் விலை விபரம்

மஸராட்டி கிப்லி: ரூ.1.10 கோடி

மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே: ரூ.1.50 கோடி

மஸராட்டி க்ரான் டூரிஷ்மோ: ரூ.1.80 கோடி

மஸராட்டி க்ரான் கேப்ரியோ: ரூ.2 கோடி

மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே ஜிடிஎஸ்: ரூ.2.2 கோடி

English summary
Italian luxury car manufacturer Maserati has inaugurated its very first dealership for India in New Delhi. The new dealership of Maserati is in partnership with AMP Supercars.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark